உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: சிரியாவில் இருந்த ரசாயன ஆயுதங்களையும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சி வீழ்ச்சி அடைந்து, கிளர்ச்சிப்படையினர் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த கிளர்ச்சிப்படையினரில் பலர், ஏற்கனவே செயல்பட்டு வந்த அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளில் இருந்தவர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxoir5bl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களது கையில் ரசாயன ஆயுதங்கள், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, இஸ்ரேல் தீவிரமாக கண்காணித்து வந்தது.சிரியாவின் குறிப்பிட்ட ஆயுதக்கூடத்தில் இந்த ஆயுதங்கள் இருப்பதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், அந்த இடத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி தரை மட்டம் ஆக்கியது. வரும் நாட்களிலும் தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளது.இது குறித்து இன்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:சிரியாவின் அதிநவீன ஆயுத கிடங்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை, முடுக்கி விட்டுள்ளோம். அதிபர் பஷார் அல்- ஆசாத்தின் வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கும் வகையில், சிரியாவில் எங்களது படைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.அல் கொய்தாவின் சித்தாந்தத்தில் வேரூன்றிய கிளர்ச்சிப் படைகளின் முன்னேற்றம் ஆபத்தானது. அதை கருத்தில் கொண்டு வரும் நாட்களிலும் வான்வழித் தாக்குதல்கள் தொடரும். இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ' வான் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், மேற்பரப்பு ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள், நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் கடலோர ஏவுகணைகள் உட்பட சிரியா முழுவதும் உள்ள ஏவுகணைகளை அழித்துவிடுவோம்,'' என்றார். இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன்சார் கூறுகையில், ''சிரிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களது குடிமக்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறோம். எந்த ஆயுதங்களும் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்துவிடக்கூடாது என்பதால் எஞ்சியிருக்கும் ரசாயன ஆயுதங்கள் அல்லது நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற அனைத்து ஆயுத அமைப்புகளை நாங்கள் தாக்குகிறோம். இது தற்காலிக நடவடிக்கை தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.V. Iyer
டிச 10, 2024 04:38

அய்யா இஸ்ரேல் ராணுவ வீரர்களே அப்படியே ஹிந்துஸ்தானுக்கு வந்து சோரோஸின் தாசர்களையும், தேசவிரோதிகளையும், மதப்பயங்கரவாதிகளையும் கலையெடுங்கள்... உங்களுக்கு புண்ணியமா போகும் .. இங்கு பாஜக அரசு இவர்களுக்கு பயந்து நடுங்குகிறதே.


தாமரை மலர்கிறது
டிச 09, 2024 21:37

சிரியா சர்வாதிகார ஆட்சியிலிருந்து மத துவேஷ அல் குயிதாவிடம் சிக்கிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் விடுதலை பெற்றதை போன்று மகிழ்ச்சி அடைகிறார்கள். போக போக, ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியே பெட்டெர் என்று நினைக்க தோன்றும். இன்னும் கொஞ்ச நாளில், பெண்கள் முக்காடு போடவேண்டும், தெருவில் தனியே செல்ல கூடாது, வேலைக்கு போக கூடாது, வெளியே போக்கவேண்டுமெனில் கணவன் அல்லது தந்தையிடமிருந்து லெட்டர் வைத்திருக்க வேண்டும். ஒன்பது வயது பெண்களை ஐம்பது வயது ஆண்கள் மணக்கலாம், பெண்கள் படிக்க கூடாது. ஆலிமோனி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம், பெண்கள் லிப்ஸ்டிக் போடகூடாது, கை கால் முடி வெளியே தெரிய கூடாது, மியூசிக் கேட்கக்கூடாது, ஆடக்கூடாது, சோசியல் மீடியாவில் பேச கூடாது, பொது வெளியில் சிரிக்க கூடாது, ஆண்கள் மீசை தாடி வளர்க்க வேண்டும் என்று டஜன் கணக்கில் கட்டுப்பாடுகள் வரும். அப்போது இந்த குத்தாட்டம் இருக்காது.


நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 21:28

இப்படித்தான் ஈராக்கிலும் சொன்னார்கள் , கடைசியில் பல அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம் , ஆனாலு ம் தமிழக முசல்மான்கள் அமெரிக்காவை ஆதரிக்கும் பொது இதனை நினைவில் கொள்வார்களா என்று யோசித்துள்ளேன் , முஸ்லீம் மதத்தினரை அழிப்பது அமேரிக்கா தான் என்றாலும் தமிழகத்தில் இந்துக்களை அழிக்க முஸ்லிம்கள் முயல்வது எப்படி பட்ட ..தனம் என்று


Rpalni
டிச 09, 2024 21:08

இந்தியா இஸ்ரேலுக்கு யாரும் கண்டும் காணாம பெரும் உதவிகள செய்யணும்.


Rpalni
டிச 09, 2024 21:06

ராஜா இஸ்ரேல் கைய வச்சா ராங்க போறதில்லே


MUTHU
டிச 09, 2024 20:46

இதெற்கெல்லாம் அமெரிக்காவின் வழிகாட்டுதல் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் வேற்று நாட்டு பகுதியில் தாக்குதல் நடத்தினால் இறையாண்மை என்று கூப்பாடு போடுவார்கள் ஐநாவில். அப்பொழுது அமெரிக்கா தான் இஸ்ரேலை பாதுகாத்து கொடுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை