உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: மத ரீதியான எதிர்ப்புகள் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, செஸ் விளையாட்டுக்கு தடை விதித்து புது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக இருப்பதால், நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையை தடுக்கும் சட்டத்தின்படி, தடை விதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத ரீதியான ஆட்சேபனைகள் செஸ் விளையாட்டின் மீது இருப்பதால், இந்த பிரச்னை தீர்க்கப்படும் வரையில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
மே 13, 2025 07:21

மூளை வேலை செய்தால் உங்களுக்கு ஆவாதே.


Rathna
மே 12, 2025 18:30

கோணங்கி பசங்க திரும்ப 6 ஆம் நூற்றாண்டு பாலைவன வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறான்.


Kasimani Baskaran
மே 12, 2025 18:03

பாமரர்களுக்கு எதற்கு செஸ்...


தத்வமசி
மே 12, 2025 14:44

பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. -


Mypron
மே 12, 2025 13:52

அறிவுக்கு சம்பந்தம் இல்லை


எஸ் எஸ்
மே 12, 2025 13:49

பாரத தேசத்தில் பிறந்தது நம் கொடுப்பினை. சும்மாவா சொன்னார்கள் புண்ணிய பூமி என்று?


அப்பாவி
மே 12, 2025 13:34

மதத் தலிவருக்கு செஸ் ஆட வராதோ?


Kumar Kumzi
மே 12, 2025 13:21

உண்மை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை