உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் குடும்பத்தினரை சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுதற்போது பிரிட்டனில் அவர் உள்ளார். இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் ' எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.https://x.com/mkstalin/status/1964601543010963666/photo/4

பென்னி குயிக் வரலாறு

தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். ஆங்கிலேய பொறியாளரான இவர், லண்டனில் இருந்து 1890களில் இந்தியா வந்தார். மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.தென் தமிழகத்தின் வைகை பாசனத்தை நம்பியிருக்கும் மக்கள் மழை பொய்த்து பஞ்சத்தில் தவிப்பதை கண்டு மனம் வருந்தி, முல்லை பெரியாறு அணைக்கான திட்டத்தை உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளை விற்று அணையை கட்டி முடித்தார். இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணி மண்டபம் கட்டி தென் தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஜான் பென்னி குயிக்கின் சமாதி லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் இருக்கிறது. இங்குள்ள கேம்பர்லி பூங்காவில் தமிழக அரசு சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஆரூர் ரங்
செப் 07, 2025 21:11

அப்படியே ஆஷ் துரை, ஜெனரல் டயர், ராபர்ட் கிளைவ், மவுண்ட்பேட்டன் குடும்பத்தாரையும் சந்தித்திருக்கலாம்.


தமிழ் மைந்தன்
செப் 07, 2025 20:59

இவரும் சென்னையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட கும்பலா?


Sankar Ramu
செப் 07, 2025 20:16

டேம் கட்டியதால் மண் வெட்ட வசதியாக இருக்குன்னு பாராட்டினாரா?


ManiK
செப் 07, 2025 20:14

திகட்டுதைய்யா உம்ம பயணக் கட்டுக்கதை.மாய பிம்பத்தை பூசும் மீடியா கட்டமைப்பால் உம்ம காட்டில் மழை. ஆனால் இந்த ரீல் அறுந்துவிட்டது சாதாரண தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.


திகழ்ஓவியன்
செப் 07, 2025 18:42

என்ன இதயம் அழுகுரல் எல்லாம் கேட்குது , ஒரு சூத்திரன் இவ்வளவு சாதிப்பதா


எஸ் எஸ்
செப் 07, 2025 19:02

கட்டுமரம் காலத்தியே இத்துபோய் உளுத்து போன வாதம். புதுசா சிந்தித்து கருத்து போடவும்


Artist
செப் 08, 2025 09:11

அலிபாபா கும்பல் ஆட்டம் அதிக நாள் இருக்காது..மதியழகன் மன்னை நாராயணசாமி சாதிக் பாஷா போன்ற அந்தக்கால திராவிட இயக்க முன்னோடிகளின் வாரிசுகள் நிலைமை என்ன ..இப்போ ஒரே குடும்ப ஆட்டம் ..


Artist
செப் 08, 2025 15:17

ட்ரம்ப் தாத்தா ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா வந்த காரணம்


ராஜ்
செப் 07, 2025 18:18

பென்னிகுயிக் குடும்பம் நீங்க விவசாய வளர்ச்சிக்கு என்ன பண்ணி இருக்கீங்க என கேட்டு இருந்தால் என்ன சொல்லியிருப்பார் ஒரு வேளை, ஆறுகளில் நிறைய குளம் வெட்டி இருக்கோம் என சொல்லி இருப்பாரோ


பெரிய ராசு
செப் 07, 2025 19:03

நிறய காடுகளை நாங்க G ஸ்கொயர் என்ற பெயரில் பிளாட் போட்டு வித்து பணமாக்கி மண்ணில் பொதச்சு வச்சிருக்கோம் , எலெச்டின் வந்தா அந்த பணத்தை எடுத்து குவாட்டர் கோழிப்பிரியாணி கொடுத்து , மக்களை டர்சாக்கி விடுவோம்


சிட்டுக்குருவி
செப் 07, 2025 18:18

கேன் யு ஷேர் வித் us வாட் யு tolded them


krishna
செப் 07, 2025 17:04

ENNA KODUMA VENUGOPAL IDHU.


Barakat Ali
செப் 07, 2025 16:29

அந்தக்குடும்பம் அப்படியொண்ணும் வசதியா இல்ல ன்னு கேள்விப்பட்டோம் ....


Kumar Kumzi
செப் 07, 2025 16:03

பென்னிகுயிக் குடும்பத்தாருடன் பென்குயின் பாஷையில் பேசிருப்பாரோ ஹிஹிஹி


முக்கிய வீடியோ