உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலம், வரும் ஜூனில் திறக்கப்பட உள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், கிராமப்புறங்களை இணைப்பதற்காக நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன. தற்போது, உலகின் மிக உயரமான பாலமாக 1,854 அடி உயர ட்யுஜ் பாலம் இருக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தில், பெய்பென் ஆற்றின் துணை நதியான நிஸு ஆற்றின் மீது இந்த பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், இதை விட மிக அதிக உயரமாக 2,051 அடி உயரத்தில், பெய்பென் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது. குய்ஸுவு மாகாணத்தில் பெய்பென் ஆற்றின் மீது, இரண்டு மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை இணைக்கும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் கோபுரத்தின் உயரம் 1,082 அடி. ஆனால் இந்த பாலத்தின் உயரம் 2,051 அடி. வரும் ஜூன் மாதம் இந்த பாலம் திறக்கப்படுகிறது. 'ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்' என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு துாண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அளவு எக்கு துாண்களைக் கொண்டு மூன்று ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். இரண்டு பள்ளத்தாக்குகளை இணைக்கும் வகையில், 3.21 கி.மீ., நீளத்துக்கு அமைந்துள்ள இந்த பாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இந்த பாலம், குய்ஸுவு மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ray
ஏப் 13, 2025 14:23

THE WORLDS HIGHEST RAILWAY BRIDGE, THE CHENAB RAIL BRIDGE, IS LOCATED IN JAMMU AND KASHMIR, SPECIFICALLY SPANNING THE CHENAB RIVER IN REASI DISTRICT. IT STANDS AT A HEIGHT OF 359 METERS 1,178 FEET ABOVE THE RIVER BED.


M R Radha
ஏப் 13, 2025 11:42

இதென்னங்க பெரிய பாலம். நம்ம திருட்டு த்ரவிஷ வாரிசு ஊழல் குடும்ப கட்சிக்கு இந்த மாதிரி காண்ட்ராக்ட் கொடுத்து பாருங்க. 45% கம்மிசின அடிச்சு ஆறே மாசத்துல முடிச்சு பாலத்தையே விழ வச்சிடுவானுங்க


பாமரன்
ஏப் 13, 2025 09:17

சுருக்கமாக சொன்னால் நம்ம பாம்பன் ஒத்தையடி பாலம் கட்ட ஆரம்பித்த பிறகு கட்ட ஆரம்பித்த பாலம் இது...


அப்பாவி
ஏப் 13, 2025 07:09

பலே..பலே. தினமலரும் ரூ குறியீடைப் பயன்படுத்துது. தமிழர் அனைவரும் அதையே பயன் படுத்தணும்.


Venkatesh
ஏப் 13, 2025 07:03

இது என்ன பெரிய விஷயம். எங்க நாட்டு அரசியல்வாதிங்க ஊழலிலேயே 2200 கோடி சம்பாதிப்பாங்க.


Kasimani Baskaran
ஏப் 13, 2025 06:14

சர்வாதிகார கம்மிகளிடம் பணமிருக்கிறது - கட்டுகிறார்கள்.


பாமரன்
ஏப் 13, 2025 09:21

ஏன் காசி..ஜி டாட்டா காட்டி தொறக்கட்டும்... நூறு லட்சம் கோடி கடனோட இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்... . நாம் தான் ஒலகத்துக்கே மருந்து குடுக்கறோம் நமக்கு ஒரு சாலை கட்டிக்க முடியாதா... அட அதானிக்கு குடுத்து டோல் கூட வாங்கிக்கட்டுமே.. என்னது மக்களுக்கு நல்லதா நடக்குமா... அப்ப வாணாம்... சிம்பிளா காங் நேரு அவுரங்கசீப் டீம்கா ஒயிக கூட சீனாவையும் சேர்த்து சொல்லிட்டு போவோம்


Haja Kuthubdeen
ஏப் 13, 2025 10:52

பணம் எவனிடம் இல்லை..சீனாவில் கமிசன் கரெப்சன் நடக்காது...இங்கே பாதி பணம் கமிசன்லேயே போயிடும்.


Kasimani Baskaran
ஏப் 13, 2025 13:12

[சீனாவில் கமிசன் கரெப்சன் நடக்காது] ஓவரான கற்பனை. 43வது இடம்.


Dharmavaan
ஏப் 13, 2025 15:33

காசு ஜி கடன் வாங்கிய பாலம் கட்டுகின்றனர் .கடன் வாங்கி குடும்பத்துக்கு கொள்ளை அடிப்பதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை