மேலும் செய்திகள்
பாக்., சென்ற சீக்கியர்கள் தாயகம் திரும்பினர்
2 hour(s) ago
உலக காப்புரிமை போட்டியில் சீனா தொடர்ந்து முன்னிலை
2 hour(s) ago
பீஜிங்: 'உலக நாடுகள், கடந்த, 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை சீனா தாக்கல் செய்தவை' என, டபிள்யு.ஐ.பி.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. டபிள்யு.ஐ.பி.ஓ., எனப்படும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2024ல் காப்புரிமை தாக்கல் செய்ததில், சீனா தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, சீனா, 18 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, உலகின் மொத்த காப்புரிமை தாக்கலில் கிட்டத்தட்ட பாதி எனவும், அமெரிக்கா சமர்ப்பித்த விண்ணப்பங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது. முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா மற்றும் ஜெர்மனி என பிற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. உலக காப்புரிமைகளில், கணினி தொழில்நுட்பம், மின்சார இயந்திரவியல், அளவீட்டு தொழில்நுட்பம், டிஜிட்டல் தகவல் தொடர்புகள், மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முன்னணியில் உள்ளன. காப்புரிமைகளைத் தவிர, வர்த்தக முத்திரை மற்றும் வடிவமைப்பு விண்ணப்பங்களிலும் சீனா முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு உலகளவில், 37 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை டபிள்யு.ஐ.பி.ஓ., பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2023ம் ஆண்டைவிட 4.90 சதவீதம் அதிகரிப்பையும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வளர்ச்சியையும் குறிக்கிறது. நடப்பாண்டில் உலகளவில் கிட்டத்தட்ட 21 லட்சம் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago