உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  உலக காப்புரிமை போட்டியில் சீனா தொடர்ந்து முன்னிலை

 உலக காப்புரிமை போட்டியில் சீனா தொடர்ந்து முன்னிலை

பீஜிங்: 'உலக நாடுகள், கடந்த, 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை சீனா தாக்கல் செய்தவை' என, டபிள்யு.ஐ.பி.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. டபிள்யு.ஐ.பி.ஓ., எனப்படும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2024ல் காப்புரிமை தாக்கல் செய்ததில், சீனா தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, சீனா, 18 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, உலகின் மொத்த காப்புரிமை தாக்கலில் கிட்டத்தட்ட பாதி எனவும், அமெரிக்கா சமர்ப்பித்த விண்ணப்பங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது. முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா மற்றும் ஜெர்மனி என பிற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. உலக காப்புரிமைகளில், கணினி தொழில்நுட்பம், மின்சார இயந்திரவியல், அளவீட்டு தொழில்நுட்பம், டிஜிட்டல் தகவல் தொடர்புகள், மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முன்னணியில் உள்ளன. காப்புரிமைகளைத் தவிர, வர்த்தக முத்திரை மற்றும் வடிவமைப்பு விண்ணப்பங்களிலும் சீனா முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு உலகளவில், 37 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை டபிள்யு.ஐ.பி.ஓ., பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2023ம் ஆண்டைவிட 4.90 சதவீதம் அதிகரிப்பையும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வளர்ச்சியையும் குறிக்கிறது. நடப்பாண்டில் உலகளவில் கிட்டத்தட்ட 21 லட்சம் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VENKATESAN
நவ 14, 2025 08:13

இந்திய ஜனத்தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு கூட காப்புரிமை என்றால் என்னவென்றே தெரியாது. இதுதான் உண்மை நிலவரம். இதைப் பற்றி விழிப்புணர்வு இந்திய அரசு வழங்கினால், சீனாவை விட மூன்று மடங்கு அதிகம் நாம் காப்புரிமை பெறுவோம்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 17, 2025 05:56

முதலில் ஒன்றிய அரசுக்கு இருக்கணும்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 14, 2025 05:41

சீன உயிரி மருந்து தொடக்க நிறுவனங்கள் Biopharma Startups இப்போது உலகின் மருந்துப் பைப்லைனில் ஒரு சக்திவாய்ந்த புதுமையின் ஆதாரமாக உருவெடுத்துள்ளன. வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற சீன விஞ்ஞானிகள் மற்றும் உள்நாட்டு சீன மூலதனத்தின் மூலம், இந்த நிறுவனங்கள் புதுமையான மருந்து கலவைகளை விரைவாகக் கண்டறிந்து, ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்துகின்றன. இருப்பினும், இந்த நிறுவனங்கள் தாங்களாகவே உலகளாவிய சந்தைகளில் நுழைய முயற்சிப்பதற்குப் பதிலாக, தங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை IP அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு MNCs உரிமம் வழங்குகின்றன. 2018-2019 க்குப் பிறகு, இந்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சீன உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவுகளின்படி, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் ஒரு வருடத்திற்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் நடுத்தர ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மதிப்பு: இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு அதாவது மொத்த முன் upfront /மைல்கல் கொடுப்பனவுகள் milestone payment பல பில்லியன் டாலர்களை Dozens of billions of dollars தாண்டிவிட்டது. பல ஒப்பந்தங்களில் முன்பணம் மட்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் என்ற அளவில் உள்ளது.


Kasimani Baskaran
நவ 14, 2025 03:52

அத்தனையும் ஒரிஜினலா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அதை புரிந்து கொள்ள காலம் பிடிக்கும்..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 17, 2025 05:57

பூனை கண்ணை மூடிக்கிட்டு ஒலகம் இருண்டு விட்டது என்றதாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை