உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய ராணுவத்துக்கு சீனா உதவுகிறது: போர் கைதிகளை காட்டி உக்ரைன் புகார்

ரஷ்ய ராணுவத்துக்கு சீனா உதவுகிறது: போர் கைதிகளை காட்டி உக்ரைன் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ் : தங்கள் மீது நடத்தப்படும் போரின்போது, ரஷ்யாவின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என, உக்ரைன் குற்றஞ்சாட்டிஉள்ளது. இதற்கு ஆதாரமாக, இரண்டு சீன போர் கைதிகளை அடையாளம் காட்டிஉள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர் மூன்று ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டார். ஆனால், இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.தங்களுக்கு எதிரான போரில், ரஷ்ய ராணுவத்துக்கு சீனா உதவுவதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை, ரஷ்யா மறுத்தது. பொய் தகவல் வெளியிட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சீனாவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்ட இரண்டு சீன போர்க்கைதிகளை, உக்ரைன் ராணுவம் அடையாளம் காட்டிஉள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில், அந்த இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, இதுதான் ஆதாரம் என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.சர்வதேச விதிகளின்படி, போர்க்கைதிகளின் அடையாளத்தை வெளியிடக் கூடாது. அதை மீறி, உக்ரைன் இரண்டு சீன போர்க்கைதிகளை அடையாளம் காட்டிஉள்ளது. அமெரிக்க அதிபரின் போர் நிறுத்த முயற்சிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிடிகொடுக்கவில்லை. அதனால், அந்த முயற்சியை டொனால்டு டிரம்ப் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக உக்ரைன் இவ்வாறு செய்துஉள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அசோகன்
ஏப் 18, 2025 12:44

37 நாடுகள் தோளில் அமர்ந்து சண்டை போடும் நீ.... ரஷியாவை குறை சொல்ல என்ன யோகிதை உள்ளது........


Sampath Kumar
ஏப் 18, 2025 10:32

ரஷ்யாவும் சீனாவும் கிட்டத்தட்ட பங்காளிகள் தான் அமெரிக்கா ஒன்றும் ஆட முடியாது உக்ரைன் உலக நாடுகளின் ஆதரவு பெற்றாலும் போரை நிறுத்த முடியாது புடின் ஒரு ப்ரோ கம்யூனிஸ்ட்


நிக்கோல்தாம்சன்
ஏப் 18, 2025 07:17

இவர்கள் போர் கைதிகளே இல்லை, நாடு விட்டு நாடு வந்த தீவிரவாதிகள் என்று உக்ரைன் கூறினால் என்னாகும் கணம் கோர்ட்டார் அவர்களே


essemm
ஏப் 18, 2025 06:51

இவருடைய இந்த பேச்சு மத துவேஷத்தை தூண்டுவதாக உள்ளது. இப்படி இவர் பேசியது சரி என்றால். இங்குள்ள மாற்று மதத்தினருக்கும் பேசவுரிமை உள்ளது என்பதை மறக்கக்கூடாது. அப்படி பார்த்தால் இந்தியாவில் எந்த இஸ்லாமியர்களும் வசிக்க கூடாது என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. இங்குள்ள இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறி அவர்களை தங்கள் நாட்டின் குடிமக்களாக கூடியமருத்துவார்களா. இல்லையேல் இங்குள்ளவர்களுக்கு அது உண்மை என்றோ சிலர் சொன்னது சரி என்ன ட்ரோப் தோன்றினால் இந்தியாவை விட்டு இவர்கள் பாக்கிஸ்தானுக்கோ. இல்லை அபிகானிஸ்தனுக்கோ இந்தியா அரசே இவர்களை அங்கு செல்ல இலவசமாக செல்ல அனுமதிக்கவேண்டும்.


புதிய வீடியோ