உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலை: 610 சதுர கி.மீ.,ல் திபெத்தில் அமைக்கிறது சீனா

உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலை: 610 சதுர கி.மீ.,ல் திபெத்தில் அமைக்கிறது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனா, 50 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில், 610 சதுர கி.மீ., பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை திபெத்தில் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.நம் அண்டை நாடான சீனா, கார்பன் - டை - ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை மிகப்பெரிய அளவு வெளியேற்றும் நாடாக உள்ளது.இது பருவநிலை மாற்றம், பூமியின் வெப்பநிலை உயர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. சமீபத்திய ஆய்வுகள் அந்நாட்டின் கார்பன் உமிழ்வு, 2024 மார்ச் முதல் குறையத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 1 சதவீதம் குறைந்துள்ளதாக கூறுகின்றன.வரும், 2060ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை, சீனா பூஜ்ஜியமாக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு, அடுத்த ஒவ்வொரு ஆண்டும் கார்பன் உமிழ்வை, 3 சதவீதம் குறைக்க வேண்டும்.இதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை, அணு மின்சக்தி ஆகியவற்றில் சீனா முதலீடு செய்து வருகிறது. இதில், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை கெடுக்காத துாய மின்சாரம் எனப் படுகிறது.சீனாவின் மொத்த சூரிய மின்சக்தியின் அளவு, 10 லட்சம் மெகாவாட். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 2.12 லட்சம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யும், 'பேனல்'களை சீனா நிறுவியுள்ளது. இது, அமெரிக்காவின் மொத்த சோலார் திறனான 1.78 லட்சம் மெகாவாட்டை விட அதிகம்.இந்நிலையில், சீனாவின் மேற்கில் 2,000 கி.மீ.,க்கு மேல் பரந்து விரிந்துள்ள திபெத் பீடபூமியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியில் அந்நாட்டின் மின்துறை ஈடுபட்டு உள்ளது.இந்த ஆலை, 610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இது அளவில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு இணையானது.தற்போது இந்த பரப்பில், மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மொத்தமாக 70 லட்சம் பேனல்கள் அமைய உள்ளன. இதன் மூலம் 43,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை வைத்து, 50 லட்சம் குடும்பங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், இந்த சூரிய மின் உற்பத்தி ஆலை மக்கள் அடர்த்தி குறைந்த மேற்கில் உள்ளது.இங்கு இருந்து, சீனாவின் கிழக்கிற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல கிரிட் எனப்படும் கம்பி வடம் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. இந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த சூரிய மின்சக்தி உற்பத்தி, 1.20 லட்சம் மெகாவாட்டாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

palanisamy
ஆக 24, 2025 14:54

நாமும் தனியாரிடம் வாங்காமல் இது போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்


palanisamy
ஆக 24, 2025 14:52

இது போன்ற பெரிய மின் திட்டங்களை வரவேற்க வேண்டும்.


vbs manian
ஆக 22, 2025 11:09

பார் பார் சீனாவை பார். கற்றுக்கொள்ள வேண்டும்.


V RAMASWAMY
ஆக 22, 2025 07:55

சீனாவின் சுறுசுறுப்பும் செயல் திறனும் அறிவுள்ள இந்தியர்கள் மெத்தனத்தைக் கைவிட்டு கடைப்பிடித்தால் சீனாவைவிட பன்மடங்கு முன்னேறலாம்.


இறைவி
ஆக 22, 2025 06:42

இந்த திபெத் பீடபூமியைத்தான் நேரு காலத்தில் சீனா ஆக்கிரமித்து பிடித்துக் கொண்டது. நேருவும் அது புல் பூண்டு கூட முளைக்காத இடம். போனால் போகட்டும் என்று அறிவித்தார். அவருடைய மேலான திறமையினால் (?) இன்னும் எவ்வளவு இழப்பை நாம் உணர வேண்டுமோ!


SANKAR
ஆக 22, 2025 10:32

Tibet was independent country at that time and NOT Indian territory..It's leader Dalai Lama sought asylum in India . Inspite of threat from China Nehru gave him asylum and land and Dalai Lama still lives there..DHARMASHALA .


புதிய வீடியோ