உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக சரிவு

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2வது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4s3q4gy1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகை குறித்து, சீனாவின் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவில் கடந்த 2023ம் ஆண்டு மக்கள்தொகை 140 கோடியே 90 லட்சமாக இருந்தது. இதில் 2024ம் ஆண்டில், 13 லட்சத்து 90 ஆயிரம் குறைந்துள்ளது. 2023ம் ஆண்டு சீனாவில் 90 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2024ம் ஆண்டில் 95 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2023ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.39 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2024ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 6.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சமாக இருந்தது. 2024ம் ஆண்டில் ஒரு கோடியே 93 லட்சமாக இருந்தது.சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 2024ம் ஆண்டில் 31 கோடியாக அதிகரித்து உள்ளது, இது மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் ஆகும். இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டில் 29 கோடியே 69 லட்சமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 21:13

போதாதற்கு பங்களாதேஷில் இருந்து ஒரு கூட்டம் வேறு , எல்லாருக்கும் கோட்டா இலவசம்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 17:37

ஐயோ aanadhu - இப்போ இந்தியாவில் ஜனத்தொகை அதிகாரிப்பது ஆர் எஸ் எஸ், பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடு கட்சி களின் அறிக்கை களால் தான். ஒருத்தர் இந்துக்கள் 4 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். டெல்லி பாஜக, கர்ப்பிணி களுக்கு 21,000 ரூபாய் தரப் போகிறது. ச. நாயுடு தேர்தலில் நிற்கணும் னா 4 பிள்ளைகள் இருக்கணும் என்கிறார். நீங்கள் சொல்லும் மூர்க்ஸ் எல்லாம் இப்போ நல்லா படிச்சு துபாய், மஸ்கட், UAE னு வேலைக்கு போயி செட்டில் ஆயிடறாங்க. இந்துக்கள் தான், அந்த மசூதி சிவன் கோவில், இந்த மசூதி விஷ்ணு கோவில், மூர்க்ஸ் ஒழிக, ஜெய் ஸ்ரீ ராம் ன்னுகிட்டு பொட்டு வெச்சுகிட்டு சுத்தறாங்க.


Raj S
ஜன 17, 2025 21:50

உங்களால பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால நீங்க சொல்ற படிச்சி செட்டில் ஆன ஆளுங்களோட மக்கள் தொகை சதவிகிதம் எவ்வளவு, இப்போ எவ்வளவுன்னு சொல்ல முடியுமா? அப்போ தெரியும் அவங்க எவ்வளவு பெத்து போட்டுருக்காங்கனு


Sampath
ஜன 17, 2025 21:54

நீ பாத்த . மைக்ரோசாப்ட் CEO யாரு ?


அப்பாவி
ஜன 17, 2025 15:43

நாம் எப்போதும் ஸ்டெடி. 140 கோடி.


Sampath Kumar
ஜன 17, 2025 15:33

இந்தியாவில் இந்த விஷயத்தில் சரிவு உண்டா ? கிடையாது ஆண்டுக்கு 10 சதவிகிதமாக பிறப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது உண்ணவோ பற்றாக்குறை ஏற்படும் பொது தான் இதனை மக்கள் உன்னார்வர்கள் அரசு விழித்து கொண்டு உடனடி நடவடிக்கை தேவை


Anand
ஜன 17, 2025 16:10

இந்தியாவில் மூர்க்கம் உள்ளவரை சரிவு என்கிற கேள்விக்கே இடமில்லை...


MARI KUMAR
ஜன 17, 2025 15:24

மக்கள் தொகை கட்டுப்பாட்டை அரசு தான் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


chennai sivakumar
ஜன 17, 2025 14:29

அந்த ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யவும்.


Anand
ஜன 17, 2025 14:27

மூர்க்கத்தை அவ்விடம் இட்டு செல்லுங்கள் அசுர வளர்ச்சி பெரும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை