உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்

உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்ட சீனர்கள் இருவர் தங்கள் நாட்டு ராணுவத்திடம் சிக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. பல்வேறு பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவோரை ஏமாற்றி அழைத்து வந்து போரில் ஈடுபடுத்துவதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டு உள்ளது.ஆனால், ரஷ்யாவின் கூட்டாளி நாடுகளான வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள், தெரிந்தே ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்கள் சப்ளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ரஷ்யா ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்துள்ளது.இதை அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.ஐநா பாதுகாப்பு சபையின் பொறுப்புள்ள நிரந்தர உறுப்பினர் என்ற நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. இது தொடர்பாக சீன அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஏப் 09, 2025 19:25

அப்படியே இருந்தாலும் சரி தான்.... உங்கள் நாட்டின் சார்பாக அமெரிக்கா.... இங்கிலாந்து.... பிரான்ஸ் நாடுகளின் வீரர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லையா ???


நிக்கோல்தாம்சன்
ஏப் 09, 2025 06:43

வடகொரியர்களுக்கும் சீனர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை ஜென்டில் மேன்


Kasimani Baskaran
ஏப் 09, 2025 03:53

நிலவுக்கு போனால் கூட அங்கும் ஒரு நாயர் டீ ஸ்டால் இருக்கும் என்பார்கள் - அதுபோலத்தான் சீனர்கள் செவ்வாய் கிரகத்தில் கூட டேரா அடித்து குடும்பத்துடன் சீனப்புத்தாண்டு கொண்டாடி விடுவார்கள்... இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை..


Ramesh Sargam
ஏப் 08, 2025 22:21

சீனர்களை நம்பவே கூடாது.


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 22:10

அடையாறு தாய்லாந்து ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிடும்போது ரெண்டு ஊழியர்கள் தாய்லாந்து சாயலில் குறுக்கும் நெடுக்குமா உலாத்திக்கொண்டிருந்தார்கள் ..ஒருவன் பீகார்காரன் பாணியில் புகையிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தான் . நான் அவனிடம் தாய்லாந்திலும் இந்த பழக்கம் உண்டா என்று கேட்டதற்கு நான் நேபாளி ..எனக்கு வேஷம் கட்டி மேக்கப் போட்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து போக சம்பளம் தருகிறார்கள் என்று சொன்னான் ..நிறைய சீனர்கள் வியாபார நிமித்தமாக ரஷ்யா செல்வதுண்டு ..ரஷ்யாவில் அந்த தொழில் சர்வ சாதாரணம் ..ஒரு சில கலப்பு குழந்தைகள் சீன சாயலில் இருக்க கூடும்


Karthik
ஏப் 08, 2025 22:50

அப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது..


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 22:07

ஒரு ஆயிரம் 200 உ.பி ஸ் ரஷ்ய படையில் சேரத் தயார். இளைய தளபதி அனுமதிக்க வேண்டும்


Narayanan K
ஏப் 09, 2025 06:39

ஆரூர் ஜி, நம்ம உண்டியல் குலுக்கிகளை மறந்து விட்டீர்கள்


முக்கிய வீடியோ