உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன அதிபர் புத்திசாலி நபர்: அதிபர் டிரம்ப் பாராட்டு

சீன அதிபர் புத்திசாலி நபர்: அதிபர் டிரம்ப் பாராட்டு

பீஜிங்: ஒரு புறம் சீனாவுடன் வரி விதிப்பு யுத்தம் செய்யும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்யை புத்திசாலி நபர் என பாராட்டி உள்ளார்.டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. இதனால் சீனா, ஏற்கனவே அறிவித்த 34 சதவீதம் வரியுடன் 50 சதவீதத்தை சேர்த்து ஒரே நேரத்தில் 84 சதவீத வரியை அறிவித்தது. தற்போது சீனாவுக்கு கூடுதலாக 21 சதவீதம் வரி போட்டு, மொத்த வரியை 124 சதவீதமாக டிரம்ப் உயர்த்தி விட்டார். ஒரு புறம் சீனாவுடன் வரி விதிப்பு யுத்தம் செய்யும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்யை புத்திசாலி நபர் என பாராட்டி உள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜின் பிங் புத்திசாலி நபர். என்ன செய்ய வேண்டும் என்பது சீன அதிபர் ஜின் பிங் கிற்கு தெரியும். தன் நாட்டை நேசிப்பவர். விரைவில் அவரிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும். போட்டி முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Thetamilan
ஏப் 10, 2025 22:55

இப்படி இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்தியா என்ன செய்யும் ?


Sankar MS
ஏப் 10, 2025 17:12

நீ மஙகுனிங்கிறத நீயே நிருபிச்சிக்கிற.


Sankar MS
ஏப் 10, 2025 16:58

விலை அல்லது வரி கூட்டினால் மட்டும்,..


MUTHUVELU THIRUMURUGAN
ஏப் 10, 2025 16:54

உங்களை போல நபர்களை சீனா நாட்டில் வைத்து இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்..சர்வாதிகாரி ,ஒரு மொழி ஒரு மதம்,உச்ச நீதி மன்றம் இல்லை, வக்ப் வாரியம் போல இடத்தை ஆட்டை போட முடியாது . சீன சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு இந்தியாவிற்க்கு சப்போர்ட் பண்ண முடியாது


Saai Sundharamurthy AVK
ஏப் 10, 2025 16:48

இந்த விஷயம் மோடிக்கு கூட தெரியும். ட்ரம்ப்பை பற்றி நன்கு அறிந்தவர் மோடி. அவரை கணிக்க முடியாது என்று தெரியும்.


ديفيد رافائيل
ஏப் 10, 2025 15:54

சீன அதிபர் உண்மையிலே புத்திசாலி தான். அதிபர் டிரம்ப் வரி உயர்த்த இந்தியா தான் பணிந்து விட்டதே அமெரிக்காவை விட்டா வாழ முடியாதுன்னு இந்தியா பணிந்து விட்டதே. அனைத்து நாடுகளும் அமெரிக்க அதிபர் காலில் விழுக வேண்டுமென்ற நினைப்பு போல. சீன அதிபர் அப்படியில்லை அமெரிக்க உதவி தேவையில்லை என்று வரி உயர்த்தியது நல்லது தான்.


Sankar MS
ஏப் 10, 2025 17:06

நீ மஙகுனிங்கிறத நீயே நிருபிச்சிக்கிற. விலை அல்லது வரி ஏறினாலோ மட்டும் மோடியை குறை சொல்லு...அதுதானே உன் எண்ணம்?....


Gurumurthy Kalyanaraman
ஏப் 10, 2025 18:38

மூளையை அரபு நாடுகளில் கழட்டி வைத்து விட்டீர்கள் போலும். சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதும் இந்த வேலையில், அமெரிக்காவானது சீனாவை தவிர ஏனைய நாடுகளில் மட்டும் இருந்து இறக்குமதியை தொடரும்படி உத்தரவிட அதிக வாய்ப்பு உள்ளது. அதில் இந்தியாவும் வியட்நாமும் பெருத்த லாபம் அடையும். நீர் கூறும்படி அமெரிக்காவிற்கு மிரட்டல் விட்டால், உள்ளதும் போகும். உம்மைப்போல் அதி புத்திசாலிகள்தான் இப்போது நாட்டிற்கு தேவை


Saravanan
ஏப் 11, 2025 00:36

அது சரி டேவிட் raphel உங்களை போன்ற ..மாறிகள் இப்படி தான் செய்ய முடியும் நன்றி கூகுல் translate


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை