உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கிறிஸ்துவ - முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

 கிறிஸ்துவ - முஸ்லிம் கவுன்சில்கள் கருத்தரங்கம்: அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேக்ரமென்டோ: கலிபோர்னியாவில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் கவுன்சில்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில், 'ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடத்தியதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நியூயார்க் மாகாண சர்ச் கவுன்சிலின், 'மத தேசியவாத திட்டம்' அமைப்பினரும், இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலான, ஐ.ஏ.எம்.சி.,யும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இக்கருத்தரங்கில், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள் என்ற பெயரில், அமெரிக்க வாழ் ஹிந்துக்களை குறி வைத்து நியாயமற்ற முறையில் வெறுப்புணர்வுகளை முன்வைத்ததற்காக, அமெரிக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'வடக்கு கலிபோர்னியா மற்றும் இந்தியாவில், ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் மற்றும் உலகளாவிய மத தேசியவாதங்கள் உடனான உறவுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், உலகெங்கிலும் அதிகரித்து வரும் மதத்தை அடிப்படையாக கொண்ட தேசியவாத அரசியல் இயக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஹிந்து தேசியவாதத்தின் தீவிர வடிவம் என்று கருதப்படும் ஹிந்துத்துவம், விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக கூறப்படும் கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தால் சமூகத்தில் எவ்வாறு பிளவு ஏற்படுகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ தேசியவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இவைதவிர, ஹிந்துத்துவ கொள்கைகள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு, கலிபோர்னியாவில் உள்ள ஹிந்து சமூகத்தினரிடையே அவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவாத பொருள் ஹிந்துத்துவம் என்றாலும், விவாதத்துக்கான கருப்பொருளாக ஹிந்து மதத்தை ஆயுதமாக்குதல் என தலைப்பிடப்பட்டது ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், கருத்தரங்கின் விவாத தலைப்பு ஹிந்து மதம் என்ற ஒரு மதத்தையே தவறாக சித் தரித்து, அதை ஒரு வன்முறை சித்தாந்தமாக பார்க்க துாண்டுகிறது என்றும், இது ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை துாண்டுகிறது என்றும் ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியதுடன், தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

இந்தியன்
நவ 15, 2025 23:49

இந்தியர்கள் அமெரிக்கா காரனுக்கு வேலை செய்ய அங்கே போகக்கூடாது


Sridhar
நவ 15, 2025 15:38

உலகில் உள்ள ஏனைய மதங்களெல்லாம் தங்கள் கோட்பாடுகளை மிக உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று அந்த மதத்தினரை கட்டாயப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அவற்றை மீறுபவர்களை மதத்தை விட்டு வெளியேற்றுவதும் மற்ற பிற தண்டனைகளும் கொடுக்கின்றன. ஹிந்து மதம் ஒன்றுதான் நீ எப்படி வேண்டுமானாலும் இரு, கடவுளே இல்லை என்று சொன்னாலும் பிரச்சனை இல்லை, மத சடங்குகளை கடைபிடிக்கவிட்டாலும் ஓகே என்று எல்லை மீறிய சுதந்திரத்தை அளிக்கிறது. பார்க்கப்போனால் முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்க பல்கலைகளை சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தின் இந்த சுதந்திர தன்மையை மதித்து அதற்க்கே அவர்கள் ஆதரவை அளித்திருக்கவேண்டும். ஆனால் உயிர் பயம் மற்றும் பணம் காரணமாக அவர்கள் தவறாக ஹிந்து மதத்தை குறிவைக்கிறார்கள். உலகில் மற்றபகுதிகளில் இருந்த அந்தந்த மண்ணுக்குரிய பிராந்திய மதங்கள் எல்லாம் இந்த ஆபிரகாம் மதங்களால் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக முறையாக அழிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதில் இன்றுவரை தப்பித்த ஒரே மதம் ஹிந்து மதம்தான் ஒருவேளை விட்டதை முடிக்க கிளம்பியிருக்கிறார்களோ?


Anand
நவ 15, 2025 13:59

கருத்தரங்கம் நடத்தினால் தான் சந்தேகத்திற்கு இடமின்றி குண்டுவைக்க மூர்க்கங்களுக்கு வசதியாக இருக்கும். எல்லாம் நன்மைக்கே.


SULLAN
நவ 15, 2025 13:07

அப்படியா ?? இறைவனின் சீடரை இஸ்லாமியர்கள் வணங்குகிறார்களா?? சேகர்?? வழக்கம் போலவே தவறான புரிதல்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2025 13:54

ஒரே ஒரு உதாரணம் ....... ஹநுமானை வணங்கும் பல இஸ்லாமியர்களை பார்த்துள்ளேன் .... திருவுருவப் படத்தை வைத்தே வணங்குகிறார்கள் ..... அது சரி ...... சுள்ளான் என்று இஸ்லாமியப் பெயர் உண்டா >>>>


ஆரூர் ரங்
நவ 15, 2025 14:45

அப்போ மீலாது நபி விடுமுறை வேண்டாமென்று போராட்டம் நடத்துங்க.


Anand
நவ 15, 2025 16:09

கர்நாடக மாநிலம் உடுப்பி - கார்களா பகுதியில் நம்ம ஊர் கருப்பராயன் சாமி போல உள்ள சிவன் கோவிலுக்கு முஸ்லீம் பெண்கள் வந்து வணங்குவதை பார்த்துள்ளேன்.


Rathna
நவ 15, 2025 12:53

ஆப்பிரிக்காவில் பாலைவனங்கள் பாவ மன்னிப்பை தினமும் அழிக்கிறான். சூடான், சாட், எரித்திரியா, நமீபியா, தன்சானியா, நைஜீரியா இன்னும் பல நாடுகளில் கிறிஸ்துவர்கள் வீடுகளை விட்டு தினமும் துரத்தப்படுகிறார்கள். உயிரோட எரிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில இவனுக ஒன்று சேர்ந்து கூட்டம் போடுவது வேடிக்கை. மிகவும் மோசமான நிலைமை அங்கு உள்ளது.


NALAM VIRUMBI
நவ 15, 2025 12:14

அதிபர் டிரம்ப்பினால் அமெரிக்கா அழிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக நம்மை கொள்ளை அடித்த இரண்டு திருடர்களும் நம் இந்து சமயத்தை குறி வைப்பது அறிவீனம். வரலாற்றுக்கு எதிராக பேசியது குறித்து வெட்கப்பட வேண்டும். கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால் யாருக்கும் உண்மை விளங்கும். உலகத்தையே குடும்பமாக பாவிக்கும் சனாதன தர்மத்தை தாக்குவது வெறுப்பின் உச்ச கட்டம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2025 10:25

இந்த மதங்களை விட்டு - குறிப்பாக இஸ்லாத்தை விட்டு - மக்கள் வெளியேறுகிறார்கள் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் >>>>


SULLAN
டிச 10, 2025 17:24

அப்படியா?? சரி ?? நல்லது??


Anantharaman
நவ 15, 2025 08:09

அமெரிக்க வாழ் இந்தியர்கள், வெறுப்புக்கும் ஏச்சுக்கும் இடையே செல்வம் மட்டுமே குறியாக உள்ள ஒரு வாழ்க்கைதான். தாய்நாடு திரும்புங்கள். நாம் எளிய வசதியிலும் கெளரவமாக வாழ்வும்.


Modisha
நவ 15, 2025 07:56

அமெரிக்க ஹிந்துக்களுக்கு இருக்கும் உணர்வு கூட தமிழக கேரள ஹிந்துக்களுக்கு இல்லை .


Indhiyan
நவ 15, 2025 07:51

ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்த இரண்டு ஆப்ரிஹானிய மதங்களால்தான் கோடி கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்னும் கொல்லப்பட்டு கொண்டு உள்ளார்கள். உலகில் எந்தப்பக்கம் வெடிகுண்டு வெடித்து மக்கள் கொல்லப்பட்டாலும் அதுக்கு இந்த மதங்கள் காரணமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை