உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பகோட்டா: பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா அரசு. இந்தியா எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.காங்கிரஸ் எம். பி., சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1pz5ot8r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அந்த வகையில், கொலம்பியாவில் பார்லிமென்ட் உறுப்பினர்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர். அப்போது,'இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானைத் தாக்கிய பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்த கொலம்பிய அரசாங்கத்தின் எதிர்வினையில் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இது மோசமான செயல்' என சசிதரூர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது, பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.இந்திய எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசின் அறிக்கை திரும்பப் பெறப்பட்டதை அறிந்து இந்தியா மகிழ்ச்சியடைகிறது என சசிதரூர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

spr
மே 31, 2025 19:19

"கத்தியின்றி ரத்தமின்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமொன்று நடக்கிறது" மிக சிறப்பான பணி இந்த முயற்சியை மேற்கொண்ட மத்திய அரசையும் நம் பிரதமரையும் இதில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுவோம். பயங்கரவாதம் பாகிஸ்தானிலிருந்துதான் உருவாகிறது என்பதனை உலக நாடுகள் உணர்ந்து அதற்குத் தங்கள் ஆதரவை விலக்குமானால் அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதரக் குழுக்கள் என்ன செய்கின்றன? மத்திய அரசின் முக்கியமான எதிரிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த தலைவி என்ன செய்கிறார்?


M. PALANIAPPAN, KERALA
மே 31, 2025 16:26

சசிதரூருக்கு பாராட்டுக்கள் உண்மை நியாயம் நம்மிடம் உள்ளவரை வெற்றி நமக்குத்தான்


Ramakrishnan Sathyanarayanan
மே 31, 2025 14:12

சசி தரூரையும் அவரை கண்டெடுத்த மத்திய அரசையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சல்மான் குர்ஷித் 370 நீக்கம் பற்றி பேசியதும் பாராட்டத்தக்கது


Yes your honor
மே 31, 2025 13:26

திரு. சசி தரூர் - சரியான ஆள், தவறான இடத்தில். இவரின் லெவலுக்கு உகந்தவாறு இந்தியாவில் இருக்கும் ஒரே கட்சி, பி.ஜெ.பி. மட்டுமே.


S.jayaram
மே 31, 2025 13:20

அவர்கள் ஒரு பக்கம் சுற்றி ஆதரவு தேட்டும் இன்னொரு குழுவை உருவாக்கி இந்திய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான்,வங்கதேசம், நாடுகளை சேர்ந்தவர்களையும், ரோஹாங்கியா முஸ்லிம்களையும் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு தயவு தாட்சியம் இன்றி வெளியேற்றவேண்டும் இவர்களுக்கு நாம் செலுத்தும் வரிப்பணத்தை செலவழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது


Loganathan Palani
மே 31, 2025 12:22

Good


M Ramachandran
மே 31, 2025 11:40

சுப்ரமண்யம் ஜெய சங்கர் அவர்களின் திறமைய்ய வெளி படுகிறது. சசி தரூர் திறமையும்கலந்திருக்கு. இனி நிறைய இத்தாலி கும்பலின் பிடியிலிருந்து பலர் வெளியேறு வதை பார்க்கலாம். சீக்கிரமெ இத்தாலி கும்பலுக்கும் அவர்கள் அடிமைய்யகளுக்கும் சங்கு.


Padmasridharan
மே 31, 2025 11:37

இந்தியாவில், இலஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்கார பயங்கரவாதிகளை ஒழிக்கவும் தயாராகுமா இந்திய அரசியல், உலகளவில் கொடிகட்டி பறக்க. .


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 31, 2025 11:55

சரியான கேள்வி ..... நியாயமான கருத்து ...


Ganesh
மே 31, 2025 12:45

சார், திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...


முக்கிய வீடியோ