உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய மீது அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் அல்லது பாதுகாப்பு மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது எனக்கூறியுள்ள அவர், இதனால் அந்நாடுகள் சிக்கல்களை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை டிரம்ப் ஆதரித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் அதனையே வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு உடனான இந்திய உறவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அ திபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார்.இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: சர்வதேச சட்டம் என்ற நிலையில் இருந்து அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. அனைவரும் அதே நிலையில் இருக்க வேண்டும்.இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள், தனித்துவமான அரசியல் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களை கொண்டுள்ளன. அவர்களை தண்டிக்க முயலும் தலைவர்களை கடினமான சூழ்நிலையில் ஆழ்த்தும். ஒருவர் தனது பலவீனத்தை வெளிப்படுத்தினால், அவர்களின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிடும்.வரலாற்றில் நாடுகள் கடினமான சூழ்நிலைகளை கடந்துள்ளன. காலனித்துவம், இறையாண்மை மீதான தாக்குதல்களை நீண்ட காலம் சந்தித்துள்ளன. தற்போது காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது. தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இனி யாரும் ஆதிக்க தொனியில் பேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கருணாநிதி
செப் 04, 2025 17:13

உறவு என்று சொன்னால் அதில் உறுதியாக இருக்கும் நம் ரஷ்யாவுக்கு மிகவும் நன்றி கடன் பற்றி கூறும் வாழ்த்துக்கள்


N.Purushothaman
செப் 04, 2025 05:55

புடின் முன்னாள் உளவாளி என்பதால் மனிதர்களை கையாள்வதில் கைதேர்ந்தவர் ...அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை வச்சி செய்யுறாப்புல ...


Kasimani Baskaran
செப் 04, 2025 03:54

கம்முனிசத்தால் உலகம் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மதமாற்றம் கம்முனிசப்பிரச்சினையை சிரியதாக்கி விடும் போல தெரிகிறது.


Ramesh Sargam
செப் 04, 2025 01:48

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஏழரை நாட்டு சனி பிடித்து ஆட்டுகிறது. அவர் ஒருமுறை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அந்த திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து, பூஜைகள் செய்து அங்கு கொடுக்கும் பிரசாதம் சாப்பிட்டால் அவரை பிடித்த அந்த ஏழரை சனி விலகும். பூனைக்கு யார் மணி கட்டுவது?


அப்பாவி
செப் 04, 2025 09:50

ஒரு தடவை போய் கட்டிப் புடிச்சுட்டு வந்திருந்தா சரியாயிருக்கும்.


ManiMurugan Murugan
செப் 03, 2025 23:10

ManiMurugan Murugan அருமை


Sun
செப் 03, 2025 22:37

நண்பேண்டா!


அப்பாவி
செப் 03, 2025 22:26

அடுத்த கட்டம் கம்யூனிசம் தான். மொத்தமா ஊத்திக்க ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை