உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் உயிரிழந்தார். இதன் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானம் அருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இன்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்டார். இதையடுத்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் 35 வயது உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.விமான சேவை பாதிப்பு இந்த விபத்து காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

விசாரணை

காலை 10:20 முதல் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Senthoora
ஜூலை 09, 2025 06:43

பாவம் அவரின் உடலம் கூட கிடைத்திருக்காது, விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டுசெல்லும் டாக்ஸின் ஊழியராக இருக்கும், இதுபோல ஒருசம்பவத்தை ஒரு வீடியோவில் நேரலையாக பார்த்திருக்கிறேன், எஞ்சினின் மறுபக்கம் கீமாவாக வந்திருந்தது. இதுக்குதான் விமானம் இறங்கி ஓடுபாதையால் வந்தபின் கதவு திறக்க தாமதிப்பது, எஞ்சின் முழுமையாக நிறுத்தப்படும்வரை. நம்மாளுங்க விமானம் நின்ற உடனே எழுந்து போக அவசரப்படுகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 09, 2025 04:01

பாவமடா... என்ஜினை இயக்கிய பின் பக்கத்தில் போகக்கூடாது என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லை என்றால் என்ன செய்ய முடியும்...


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 22:19

ராகுலின் கருத்தென்ன?


Senthoora
ஜூலை 09, 2025 06:44

உடனே கேட்டு சொல்லுங்க, தூக்கம் அண்ணனுக்கு வரலையாம். மற்றவன் உயிரில் இன்பம் காணுங்க.


Nada Rajan
ஜூலை 08, 2025 22:12

Rip


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை