உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு கிடையாது; ராகுலின் பேச்சை நிராகரித்த காங்., எம்.பி., சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் தலையீடு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போரை இந்தியா நிறுத்தி விட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் விமர்சனத்திற்கு, காங்., எம்.பி., சசிதரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. பிறகு, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால், வர்த்தக உறவை காரணம் காட்டி போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார். அவரது இந்த கூற்றை, இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2e5ys2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம் செய்து வந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா மட்டும் இருந்திருந்தால், பாகிஸ்தானை இரண்டாக்க பிளவுபடுத்தி இருப்பார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து அமெரிக்காவில் விளக்கம் அளிக்க சென்றுள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், ராகுலின் விமர்சனத்தை நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; போரை நிறுத்துமாறு இந்தியாவை நிறுத்த யாரும் வற்புறுத்த வேண்டியதில்லை. நாங்களே பாகிஸ்தானிடம் கூறினோம். பாகிஸ்தான் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்தத் தயாராக இருப்பதாக நாங்களே கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக் கொண்டதன் பேரில் போர் நிறுத்தப்பட்டது. இனி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியா படைகளை பயன்படுத்த தயாராக உள்ளது. பயங்கரவாதம் எனும் மொழியில் பாகிஸ்தான் பேசும் வரையில், நாம் ராணுவத்தின் மொழியில் பதிலடி கொடுப்போம். இதற்கு 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை. அமெரிக்காவுடன் நமக்கு மிக முக்கியமான உறவு உள்ளது, எனக் கூறினார்.சசி தரூரின் இந்தப் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்த மத்திய குழுவின் மற்றொரு பிரதிநிதியான மிலிந்த் தியோரா, 'அவர் எப்போதும் கட்சிக்கு முன்பாக நாட்டை பற்றியே சிந்திக்கிறார்,' என்று குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Chandru
ஜூன் 06, 2025 09:25

I am at a loss to understand why this person , I mean the one whom we are unfortunately as the leader of opposition, is still allowed to be continued with his childish behaviour, stunts and what not. There are so many things happening in our country which are supposed to be nipped in the bud by the Govt in the interest of the Nation.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2025 08:09

கான் கிராஸ் கட்சி ஆட்கள் பப்பு வை தலைவர் பதவியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். சச்சின் பைலட் அல்லது சசி தரூர் போன்ற ஆட்களிடம் தலைவர் பொறுப்பை கொடுக்க வேண்டும்.. அப்போது தான் கான்கிராஸ் கட்சி பிழைக்க வாய்புள்ளது.


Ramesh Sargam
ஜூன் 05, 2025 20:52

அந்த போர் முடிந்தது. இந்தப்போர்... தொடங்குகிறது. அந்த போர் எதிரி நாடுகளுக்கு இடையே. அதாவது இந்தியா, மற்றும் பாகிஸ்தான் இடையே. ஆனால், இந்தப்போர் ஒரே கட்சியில் உள்ள இரு தலைவர்களுக்கு இடையே.


spr
ஜூன் 05, 2025 18:03

திரு சசி தரூர் -முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் ஐ.நாவின் துணை பொதுசெயலராக தொடர்பு மற்றும் பொது தகவல் பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர். இவரது பன்முகத்திறமை அறிந்தே மோடி இவரை அமெரிக்காவிற்கு குழுத்தலைவராக அனுப்பியிருக்கிறார். இவர் கேள்விகளை எதிர்கொண்ட வகையில் இவரது திறமை புலப்படுகின்றது. வி சி க தலைவர் கூடச் சொன்னார் அதனால்தான் மோடி போரை நிறுத்தினார் என்று சொல்லியிருக்கலாமே. சொன்னது உண்மையாகவே இருந்தாலும், இந்த நெருக்கடி நேரத்தில் புதிய பகையை உருவாக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக செயல்பட்டது ஒரு ராஜதந்திரம் அல்லவா? ஆட்சிக்கு வர வாய்ப்பேயில்லாத, பொறுப்பில்லாத ஆளும் திறன் இல்லாத ராகுல் அறிய மாட்டார். அவர் பேசுவதனை ஊடகங்களும் செய்தித்தாள்களும் வெளியிட்டு அவருக்கு விளம்பரம் கொடுக்கின்றன. அவை அப்படிச் செய்யவில்லையென்றால் அவர் இருக்குமிடம் கூட அறியப்பட மாட்டாது திரு தேஜஸ்வி சூர்யா, ஜோதிர் ஆதித்யா போன்ற இளைஞர்களை பார்த்தாவது பொறுப்புள்ளவராக மாறினால், அவரது பிறப்புக்கு சிறப்புண்டு


Kasimani Baskaran
ஜூன் 05, 2025 17:32

கட்சியை பறிகொடுக்கப்போகிறாரா வின்சி


Perumal Pillai
ஜூன் 05, 2025 15:28

Tharoor knows fully well that the congress of the Italian mafia family is finished once and for all and will never raise its ugly head in Indian politics again and so taking into account his political future Tharoor is making some valid statements that will definitely irks the buffoon at the same time bringing him closer to the common patriotic folks .


Mohanakrishnan
ஜூன் 05, 2025 14:24

Better pappu visit thailand and apfrica to relax.


Mohanakrishnan
ஜூன் 05, 2025 14:22

Let sashi bring a vedio game and gift to pappu to play


kalyanasundaram
ஜூன் 05, 2025 15:04

you are suggesting a games requring some intelligence which even pappu lacks. you ahve forgottence he is still immature adolscent


SUBRAMANIAN P
ஜூன் 05, 2025 13:34

கட்சி தலைவரின் குருட்டு கருத்துக்கு சொந்த கட்சியின் மற்றோரு மூத்த தலைவரே ஆட்சேபம் தெரிவிக்கிறார். ராகுல் பேசாம வேற ஏதாவது பொழைப்பை பார்ப்பது நல்லது..


M Ramachandran
ஜூன் 05, 2025 12:14

உலகம் புரியும்.