உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 15 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஹமாஸ் தலைவர்கள் பலி

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 15 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஹமாஸ் தலைவர்கள் பலி

பெய்ரூட்: விமானப்படை மூலம் லெபனானில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதலை துவக்கிய இஸ்ரேல், அடுத்ததாக அந்த அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மற்றும் இவர்களை ஆதரிக்கும் ஈரான் ஆகிய நாடுகளை குறிவைத்துள்ளது. இதனால், மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.இது தொடர்பான இன்றைய தகவல்கள்:

ஹமாஸ் அரசின் தலைவர் பலி

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காசாவின் வடக்கு பகுதியில் சுரங்கத்தை குறிவைத்து விமானப்படை மூலம் தாக்குதல் நடந்தது. அதில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அரசின் தலைவர் ரவ்ஹி முஸ்தாஹா, ஹமாஸ் அமைப்பின் கமாண்டராக இருந்த சமேஹ் சிராஜ் மற்றும் சமேஹ் ஒவுதெஹ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டடம் தான் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு வந்தது. இஸ்ரேலில் நடந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் ஒழிக்கப்படும் வரை இத்தாக்குதல் நீடிக்கும் எனக்கூறியுள்ளது. ஆனால், இது குறித்து ஹமாஸ் அமைப்பு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட நஸ்ருல்லா

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்புல்லா இறப்பதற்கு முன்னர் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஒப்பு கொண்டதாக லெபனான் கூறியுள்ளது.இஸ்ரேல் - லெபனான் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.இந்நிலையில் லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹபீப் கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். ஹிஸ்புல்லா அமைப்பினரிடம் ஆலோசனைக்கு நஸ்ருல்லா ஒப்புதலுடன் இந்த முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தலைவர்களிடம் கூறினோம். இஸ்ரேல் பிரதமரும் ஒப்புக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். அமைதி ஒப்பந்தம் தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி லெபனான் வர இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முதியவர்களுக்கு உதவி செய்து வந்த அமெரிக்காவை சேர்ந்த கலீல் அஹமது ஜவாத் என்பவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல்

சிரியாவின் ஜேப்லே நகரில் உள்ள ரஷ்ய ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்கை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஐ.நா., கண்டனம்

ஐ.நா.,, பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இஸ்ரேல் வர தடை விதிக்கப்பட்டதற்கு ஐ.நா., அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது ஐ.நா., ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

நோக்கம் நிறைவேறியது

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் டுரோன் தாக்குதல் நடத்திய ஏமனின் ஹவுதி அமைப்பு நோக்கம் நிறைவேறியதாக தெரிவித்து உள்ளது. எதிரிகள் வீழத்தும் முன்னர் டுரோன்கள் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

15 பயங்கரவாதிகள் பலி

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நகராட்சி கட்டடம் மீது விமானப்படை மூலம் தாக்கியதில் 15 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

காசாவில் உயிரிழப்பு அதிகரிப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,788 ஆகவும், 96,794 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mei
அக் 03, 2024 21:22

ஆஹா ???


தமிழ்வேள்
அக் 03, 2024 19:41

பயங்கரவாதி கும்பலின் கடைசி கருக்குழந்தை கூட அழித்து ஒழிக்க படுவது காலத்தின் கட்டாயம்.இல்லையேல் ஜீன் டிஎன்ஏ வில் ஊறிய பயங்கரவாத எண்ணம் எப்படி எப்போது வெளிவரும் என்று கணிக்க இயலாது..


சுலைமான்
அக் 03, 2024 19:27

உலகில் ஒரு தீவிவாதி கூட பெயரளவுக்கு கூட இருக்க கூடாது. நெத்தன்யாஹூ போன்ற தலைவரே இந்தியாவுக்கு தேவை....


Pandi Muni
அக் 03, 2024 18:52

என்னய்யா வெறும் 15 தான்னு போட்டு சங்கடப்படுத்துறீங்க ஒரு 15000 போச்சி 20000 போச்சுன்னா சந்தோசப்பட்டுக்கிலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை