உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; ஹிந்துக்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; ஹிந்துக்கள் மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்டகாங்: பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் அலி, ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும், இஸ்கான் அமைப்பு குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அவரது பதிவைக் கண்டித்து கடந்த 5ம் தேதி, உஸ்மான் அலியின் கடை முன்பு இந்து சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஹிந்து, முஸ்லீம் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, வங்கதேச ராணுவம் உள்பட பாதுகாப்பு படையினர் ஹஷாரி காலி பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும், அங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பு படையினர் ஓட ஓட விரட்டியடித்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இதனிடையே, போராட்டக்காரர்கள் கல்வீசியும், ஆசிட் வீசியும் நடத்திய பதில் தாக்குலில், 9 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 582 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹிந்து சமூகத்தினர் மீது வங்கதேச ராணுவம் தாக்குதல் நடத்தும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 'சிட்டகாங்கில் இன்றைய நிலை, ஹிந்துக்கள் vs ராணுவம்,' என்று குறிப்பிட்டிருந்தார். ஹசாரி காலி ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு பெரும்பாலான ஹிந்துக்கள் கடைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதைய வங்கதேச ராணுவத்தின் ஒடுக்குமுறை பணிகளால், ஹிந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
நவ 07, 2024 22:01

மத்திய அரசு உடனே தலையிட்டு, அந்நாட்டு அரசுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிக்கை கொடுக்கவேண்டும்.


அப்பாவி
நவ 07, 2024 17:55

நமக்கு கரண்ட் பில் கட்டிட்டாப் போதும்.


Nethiadi
நவ 07, 2024 16:57

குஜராத் ல முஸ்லிம்களை தாக்குனப்ப


ஆரூர் ரங்
நவ 07, 2024 19:06

கோத்ரா ரயிலுக்கு தீ வைத்து ஜெயிலில் இருப்பது மூர்க்கம். அது போல அப்பாவிகளை கொன்றால் பாடம் கற்பிக்கலாம்தானே?


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 21:09

ரயிலுக்கு தீ வைத்தததை மறக்கடிக்க முடியாது பாய் , எவ்வளவு குரூர மனதிருந்தா ரயிலை எரித்து விட்டு இப்போ ஒன்றும் தெரியாதவன் மாதிரி கேட்கிறாய் ,


mei
நவ 07, 2024 12:12

இந்து இந்தியா இதையும் கண்டுக்காமல் போகும்


SUBBU,MADURAI
நவ 07, 2024 13:26

Indian Hindus, specially upper middle class and high class have no interest in Hinduism.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை