உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள்: கனடாவில் இந்திய திரைப்படங்கள் நிறுத்தம்

தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள்: கனடாவில் இந்திய திரைப்படங்கள் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரன்டோ : கனடாவில், இந்தியர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்குள்ள திரையரங்குகள் இந்திய திரைப்படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்ப கட்டண உயர்வால் பாதிக்கப்படும் திறன்மிக்க இந்திய ஊழியர்களை வரவேற்போம் என்று வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இது அந்நாட்டில் ஒரு சில தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்களை எழுதி வருகின்றனர். இதேபோன்று ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.அதன் ஒருபகுதியாக, ஒன்டாரியோ மாகாணத்தில் இந்திய திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கு ஒரே வாரத்திற்குள் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.கடந்த, செப்., 25ல் இரண்டு மர்மநபர்கள் திரையரங்கின் நுழைவாயிலுக்கு தீ வைக்க முயன்றனர். அந்த நேரத்தில் திரையரங்கு மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதற்கிடையே, நேற்று சந்தேக நபர் ஒருவர், தியேட்டரின் நுழைவாயில் கதவுகள் வழியாக பலமுறை துப்பாக்கியால் சுட்டார்.இரண்டு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில், பொதுமக்களின் உதவியைக் கேட்டு, மர்மநபர்கள் தொடர்பான அடையாளங்களையும், சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.இதற்கிடையே, இந்தத் தொடர் தாக்குதல்களால், இந்திய திரைப்படங்கள் திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 04, 2025 10:39

கனடா அடுத்த பாக்கிஸ்தான் ஆகப் போகிறது என்று தெளிவாக தெரிகிறது. பாவம் அமெரிக்கர்கள்.


Mecca Shivan
அக் 04, 2025 08:16

டிரம்ப் தனது அடியாட்களை வைத்து செய்கிறாரோ


Kasimani Baskaran
அக் 04, 2025 07:30

காலிஸ்தானிகளின் செயல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Nallappan
அக் 04, 2025 01:56

இதுக்கு மீ டூ மாதிரி இயக்கமே ஆரம்பிக்கலாம் நான் உள்பட இதன் வலி பெரியது என்பது 80% வெளிநாட்டு வாசிகளுக்கு தெரியும் இது சரியாக இன்னும் 30-50 வருடங்கள்டிஜிட்டல் இந்தியா ஆகலாம்


Priyan Vadanad
அக் 04, 2025 00:10

ஓட்டு திருட்டு போல மேலை நாடுகளில் நம்மவர்களால் வேலை அபகரிப்பு, கலாசார அபகரிப்பு நடக்கிறது. அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.


Easwar Kamal
அக் 04, 2025 00:08

வேற யாரு இருப்பா இந்த தெலுங்கனுங்க தன. நேற்று வரை அமைதியாக இருந்தது கனடா. முக்கியமாக கனடா தமிழர்கள் மற்றும் இந்திய வழி வந்த குஜராத்திகள் இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக போய் கொண்டு இருந்தது. சர்தார் கூட்டங்கள் அது மற்றும் தன அடவிடத்தனத்தை குறைக்காமல் போய் கொண்டு இருந்தது. புதிதாக தோன்றிய கலங்கலான தெலுங்கன் அடாவடித்தனம் குறிப்பா திரை அரங்கில் தங்கள் கை வரிசை காட்டிக்கொண்டு அதற்கு பதிலாக துப்பாக்கி மூலம் பதில் கொடுத்து உள்ளனர் யாரோ? இது இந்த தெலுங்கன் கூட்டத்துக்கு தேவை தன


Priyan Vadanad
அக் 04, 2025 00:08

ஓட்டு திருட்டு போல வெளி நாடுகளில் வேலை திருட்டு, கலாசார திருட்டு நடக்கிறது. அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.


M Ramachandran
அக் 03, 2025 23:19

கன்னடா அரசு ஒரு கையாலாகாத அரசு .ஒரு நாள் இந்தியாவிடம் உதவி கையேயானதும் போனது அப்போது ஆப்பு காய்க்க வேண்டும். காலிஸ்தான் தீவிர வாதைகலிய்ய நாடு கடத்துமாறு. சுயா நல வாதி ராகுலு என்ன.....பண்ணி கொண்டிருக்கிறார். நிஜமான அக்கறைய்ய இந்தியர் மேலால் இருந்தால் கண்டன குரல் எழுப்பலாம் அல்லவா? இதிலிருந்து இந்த நாடு மாரியின் முக நிறைய்ய கிழிகிறது. இவன் ஒரு தேச துரோகி. இவனையய பாராளுமன்றத்தில் நுழைய விடலாமா? எதிர் காட்சிகள் இவனை தலைவனாக ஏமாற்று பேர்வழியை கொள்ளலாமா ? தலைவனாக ஏற்று கொள்வதால் அவர்கள்தராதரம் நாட்டு பற்று உள்பட கேள்விக்குரியதாகிறது.


Renga raj
அக் 03, 2025 23:01

தலைவா வந்து என் பூர்வீக நிலத்தில் ஓட்டல் வைத்தேன் கடைசியில் திமுக பகுதி தலைவரும் போலீஸ் வந்து எனது தந்தை எனது தாத்தாவிற்கே பிறக்கவில்லை என்றனர் திரும்பவும் ஜெர்மனிக்கு வந்து விட்டேன் ஆனால் பத்திரம் என்னிடம் உள்ளது


naranam
அக் 04, 2025 03:57

உண்மை தான். அடுத்தவன் சொத்தை அபகரிப்பவர்கள் உலகிலேயே மிக அதிகமாக இருப்பது தமிழ் நாட்டில் தான். அதுவும் அதிமுக திமுகவினர் போல அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் யாரும் இருக்க முடியாது.


Nallappan
அக் 04, 2025 05:27

மீ டூ


Nallappan
அக் 04, 2025 05:30

இதுக்கு மீ டூ மாதிரி இயக்கமே ஆரம்பிக்கலாம் நான் உள்பட இதன் வலி பெரியது என்பது 80% வெளிநாட்டு வாசிகளுக்கு தெரியும். இது சரியாக இன்னும் 30-50 வருடங்கள் ஆகலாம்


Ramesh Sargam
அக் 03, 2025 22:41

தாய் நாட்டை தவிக்கவிட்டு வெளிநாடு சென்று அங்கு அவர்களுக்கு உழைத்து அதிக வரி கட்டி அந்நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் நம் இந்தியர்களுக்கு இது ஒரு பாடம். இனியாவது தாய் நாட்டின் முனேற்றத்துக்கு உழைக்க திரும்பி வாருங்கள்.


Priyan Vadanad
அக் 04, 2025 00:03

ஆமா இவுரு இங்க வேல வேலன்னு கூவி கூவி விக்குறார்.


முக்கிய வீடியோ