உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் இருந்து தான் கோவிட் தொற்று உருவானது: மீண்டும் சொல்கிறது அமெரிக்கா

சீனாவில் இருந்து தான் கோவிட் தொற்று உருவானது: மீண்டும் சொல்கிறது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் 19 தொற்று உருவானது என்பது உறுதிப்படுத்தக் கூடிய உண்மை' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டியது. இந்த தொற்று முதலில் சீனாவில் உறுதியானது. இதனால் இந்த தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின் போது ​​பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து தான் கோவிட் 19 தொற்று உருவானது என்பது உறுதிப்படுத்தக் கூடிய உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு கோவிட் 19 தொற்று பரவல் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கோவிட் தொற்று பரவல் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று முன்பே கூறியதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்காக அவரை பலர் கேலி செய்தனர். அவர் சதி கோட்பாடுகளை பரப்புவதாகக் கூறினர். அது உறுதிப்படுத்தக்கூடிய உண்மை என்று இப்போது எங்களுக்குத் தெரியும். மேலும் பைடன் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு அதைப் பற்றித் தெரியப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அவர்கள் அதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram Moorthy
பிப் 02, 2025 16:14

அமெரிக்க அமைச்சர் சொல்வது உண்மை தான் சைனா தான் எதிரியாக நினைக்கும் நாடுகளை முற்றிலும் முடக்க ஏதோவொரு திட்டம் போடுகிறது அதற்கு சுலபமான வழி உயிர் போக்கும் கொடூர நோய்களை பரப்பி விடுவது. இந்திய, அமெரிக்க, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை தொற்று நோயை பரப்பி இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறது கவனம் மக்களே.


Sridhar
பிப் 01, 2025 12:44

சீனாவிலிருந்து கொரோனா பரவினதென்னமோ உண்மைதான். ஆனா, அந்த வைரஸ் ஆராய்ச்சியில அமெரிக்காவும் சம்பந்தப்பட்டிருக்கோமுல்ல? ஒபாமா பவுச்சி போன்றவர்கள் மாட்டிக்குவாங்கங்கறதுனாலதானே நாங்களே பம்மி பம்மி வ்உஹான்னு சொல்றதையே தவிர்த்திட்டு இருந்தோம். இப்போ உங்களுக்கு ரெட்டை ஆதாயம், சீனாவை அடிக்கிற சாக்குல எங்களையும் போட்டு வெளுத்துருவீங்க இப்போ உங்க காட்டுல மழைதான் போங்க


Sridhar
பிப் 01, 2025 12:44

சீனாவிலிருந்து கொரோனா பரவினதென்னமோ உண்மைதான். ஆனா, அந்த வைரஸ் ஆராய்ச்சியில அமெரிக்காவும் சம்பந்தப்பட்டிருக்கோமுல்ல? ஒபாமா பவுச்சி போன்றவர்கள் மாட்டிக்குவாங்கங்கறதுனாலதானே நாங்களே பம்மி பம்மி வ்உஹான்னு சொல்றதையே தவிர்த்திட்டு இருந்தோம். இப்போ உங்களுக்கு ரெட்டை ஆதாயம், சீனாவை அடிக்கிற சாக்குல எங்களையும் போட்டு வெளுத்துருவீங்க இப்போ உங்க காட்டுல மழைதான் போங்க


Kasimani Baskaran
பிப் 01, 2025 11:31

இந்த உண்மையை அறிய இவ்வளவு நாளா?


Gokul Krishnan
பிப் 01, 2025 11:26

வாயை திறந்தால் பொய் மட்டுமே வரும் கொள்ளை மாளிகை டீப் சீக் வினல் விழுந்த அடியை திசை திருப்ப இந்த நாடகம்


Perumal Pillai
பிப் 01, 2025 11:04

China, the enemy of the mankind.


Duruvesan
பிப் 01, 2025 10:33

பாஸ் அவன் உங்க மேல சர்ஜிகள் ஸ்ட்ரிக்கே பண்ணிட்டேன், nvdia 20% down, நீங்க வேற


Barakat Ali
பிப் 01, 2025 08:24

இதை சொல்லிச் சொல்லி என்ன பயன் ???? சீனா மீது போர் தொடுங்கள் ....