உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5க்குள் தேர்தல்: காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5க்குள் தேர்தல்: காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு:வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படுகிறது.நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பொங்கிய இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாற ஒரு கட்டத்தில் தலைமைச் செயலகம், சுப்ரீம்கோர்ட், முன்னாள் பிரதமர்களின் இல்லத்தை சூறையாடினர். போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழக்க, பிரதமர் ஒலி சர்மா, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகினர். பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற, இடைக்கால பிரதமராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, தேர்வு செய்யப்பட்டு, பதவியும் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக தொடர்வார். இந் நிலையில், காத்மாண்டுவில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் இன்று (செப்.13) அதிகாலை 5 மணி முதல் விலக்கி உள்ளது. ஆனாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. சந்தைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. நேபாளத்திற்கு 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றவுடன், நேபாள நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவத்சவா சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raman.V
செப் 13, 2025 12:56

Excellent statement brother, it needs to be like that


V Venkatachalam
செப் 13, 2025 12:02

நேபாளத்தில் களமிறக்கப்பட்ட மிஷனரிகளை கண்டறிந்து களை யெடுத்தாலே நாடு அமைதியாயிடும். அமைதியா இருந்த நாட்டை பற்றி எரியும் அளவுக்கு கொண்டு வந்ததே மிஷனரிகள் தான்.முதலில் மாண்புமிகு சுசீலா கார்கி அவர்கள் மத மாற்ற தடை சட்டம் போட்டு தீவிரமா அமல் படுத்ணும். எக்ஸ் ஜட்ஜா இருந்ததால் இவங்களுக்கு இதோட தீவிரம் நல்லா தெரிஞ்சிருக்கணும். இந்த அம்மாவுக்கு நாமும் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.‌ நாடு நலமாகட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை