உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை; மீண்டும் வம்புக்கு இழுக்கும் சீனா!

தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை; மீண்டும் வம்புக்கு இழுக்கும் சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: 'தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை' என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.திபெத் புத்த மதத் தலைவராக இருப்பவர் 14வது தலாய் லாமா. இவர், 'தலாய் லாமாவின் மறுபிறவியை தன்னுடைய 'காடன் போட்ராங்' அறக்கட்டளை தான் தேர்வு செய்யும். தனக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை,' என கூறியிருந்தார்.தலாய் லாமாவின் இந்த அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்து இருந்தது. இந்நிலையில் இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 90 வயதை எட்டிய தலாய் லாமா, மறுபிறவி முறை தொடருமா அல்லது ஒழிக்கப்படுமா என்பதை முடிவு செய்ய எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. தலாய் லாமாக்களின் மறுபிறவி அவரிடமிருந்து தொடங்கவில்லை அல்லது அவரால் முடிவடையாது.புத்தர் சமூகத்தில் மறுபிறவி நடைமுறை 700 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அடுத்த தலாய் லாமாவை சீனா தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்வாறு தலாய் லாமாயின் 90வது பிறந்தநாளான இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 06, 2025 20:21

தலாய்லாமா விஷயத்தில் மட்டுமல்ல திபெத் விஷயத்தில் மூக்கை சொருக சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.


Nada Rajan
ஜூலை 06, 2025 18:21

இவர்கள் சண்டையை குப்பையில் கொண்டு போடுங்க... இரண்டு நாளா ஒரே தலாய்லாமா பிரச்சனை தலை வலிக்கிறது


தத்வமசி
ஜூலை 06, 2025 18:10

சீனத்து கம்யுனிஸ்டுகளும் நமது இருபத்தி ஒன்றாம் பக்கத்துக் காரர்கள் தான் என்று எனது நண்பர் சொல்லியுள்ளார். போலியான கம்யுனிசத்தை சம்பாதிப்பதற்காக பின்பற்றிக் கொண்டு மறைமுகமாக புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் தான் அனைவருமே என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த இரும்புக் கோட்டை உடையும் காலம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை