அமெரிக்காவில் காப்பகத்தில் திடீர் தீ விபத்து: 9 பேர் உடல் கருகி பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; மாஸசூசெட் மாகாண பகுதியில் பால்ரிவர் நகர் உள்ளது. இங்கு ஒரு மருத்துவ காப்பகம் இயங்கி வருகிறது. இந் நிலையில் இந்த காப்பகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.அங்கு காப்பகத்தில் இருந்தவர்கள் தீயின் பிடியில் இருந்து தப்பிக்க, ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி கதறி அழுதனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.காப்பக கதவுகளை உடைத்து, உள்ளே சிக்கி இருந்தவர்களை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும், 9 பேர் உடல் கருகி பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.