உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உறை பனியில் உறைந்த சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: மரணத்திற்கு காரணம் என்ன?

உறை பனியில் உறைந்த சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: மரணத்திற்கு காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையில் கடந்த மாதம் பனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மாணவரின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகுல் தவான் (18) என்ற மாணவர், இல்லினாய்ஸ் பல்கலையில் படித்து வந்தார். கடந்த மாதம் 20 ம் தேதி அவர் மாயமான நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பல்கலை அருகே சடலமாக மீட்கப்பட்டார். ஹைபோதெர்மியா காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், உறுதியான காரணம் குறித்து தெரியாமல் இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகமான ஆல்கஹால் உட்கொண்டது மற்றும் உறைபனியில் இருந்தது போன்ற காரணங்களால் உயிரிழந்தார் என கூறியிருந்தார். தற்போது, அகுல் தவான் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜன.,20ம் தேதி அகுல் தவான், நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று மது அருந்தி உள்ளார். பிறகு இரவு 11:30 மணியளவில் அவர்கள், பல்கலை அருகில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள், அகுல் தவானை உள்ளே விட அனுமதி மறுத்தனர். பல முறை உள்ளே சென்றும், அவரை அனுமதிக்க ஊழியர்கள் சம்மதிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் இல்லினாய்ஸ் கடும் உறைபனி நிலவும் காலம். வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் 30 டிகிரி வரை நிலவும். கிளப்பிற்கு உள்ளே, அனுமதி கிடைக்காததால் சோகத்தில் இருந்த அகுல் தவானை வீட்டிற்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், அந்த வாகனத்தில் செல்ல மறுத்துவிட்டார். பிறகு அவரை காணவில்லை. நண்பர்கள், அகுல் தவானை, பல முறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நண்பர்களில் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். பிறகு, பல்கலை அருகே அகுல் தவான் இறந்த நிலையில் உள்ளதாக ஊழியர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் சென்று உடலை கைப்பற்றினர். அதிக மது அருந்தியது மற்றும் அதிக குளிரான சூழ்நிலையில் அதிகம் இருந்தது ஆகியவையே காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் அகுல் தவானின் பெற்றோர் கூறுகையில், காணாமல் போன உடனையே போலீசார் எங்களது மகனை கண்டுபிடிக்காமல், 10 மணி நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தனர். காணாமல் போன இடத்திற்கும், கண்டுபிடித்த இடத்திற்கும் இடையே 400 அடி தூரம் தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
பிப் 24, 2024 00:44

அமெரிக்காவில் பரிதாப சாவுகள். இதில் மிகுந்த வேதனை என்னவென்றால் மாணவர்கள் அதிகம் இறக்கிறார்கள்.


pandi
பிப் 23, 2024 22:49

போலீஸ் உடனேயே தேட ஆரம்பித்தனர். கலிபோர்னியாவில் இருந்து வந்ததால் அவர் பனிக்கான உடையை அணிந்திருக்கவில்லை. திரும்பிப்போகும் வழியில், போதை தலைக்கேறி ஒரு குப்பைத்தொட்டியில் பின் விழுந்திருக்கிறார். அதுவுமில்லாமல் அவருடைய நண்பர்கள் குடித்ததை பற்றி போலீசிடம் சொல்லவில்லை.


சண்முகம்
பிப் 23, 2024 19:28

அமெரிக்காவில் 21 வயது ஆகாதவர்கள் பாருக்குள் நுழைய முடியாது. ஒரு நபர் காணவில்லை என்று புகார் செய்தால், 24 மணி நேரம் கழித்தே நடவடிக்கை எடுப்பார்கள்.


sinnasaami
பிப் 23, 2024 16:41

உள்ளூரில்.இல்லாத ஐ.ஐ.டி, என்.ஐ.டி எல்லாம் கிடைக்ஜாம இல்லியனாய் ல் தண்ணி அடிக்க கெளம்பிட்டாரு. ஃபாரின் சரக்கை கண்டதும் குடம் குடமா குடிச்சி..


Karthik
பிப் 24, 2024 09:43

உள்ளூரில் ஆயிரம் கல்லூரி இருந்தாலும் reservation என்ற பேய் இருக்கிறது


ராஜா
பிப் 23, 2024 15:47

நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு செல்ல அந்த பெற்றோரின் வளர்ப்பு முறை தான் காரணம்.


Senthoora
பிப் 23, 2024 20:23

@ ராஜா, நீங்க வீணாக பெற்றோர்களை குற்றம் சொல்லவேண்டாம், கட்டுப்பாடாக வளர்த்தபிள்ளைகள்., வெளிநாடுபோனதும் கட்டுப்பாடு இல்லாமல் நடப்பதுதான் காரணம்,


அசோகன்
பிப் 23, 2024 15:05

படிக்க அணுப்பினா வயிறு முட்ட தினம் தினம் குடித்து கும்மாளம் போட்டால் எப்படி.......... எல்லாம் திராவிட மாடல்


rama adhavan
பிப் 23, 2024 13:53

இவர் இரவு விடுதிக்கு குடித்து விட்டு சென்று உள்ளார். உள்ளே விட மறுத்து விட்டனர். எனவே வெளியில் உறை குளிரில் மரணம். படிக்கப் போன இவருக்கு ஏன் குடி, இரவு விடுதி.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 13:40

பெற்றோர்களே ..... இந்த குடிகார புள்ளய நீங்க பெத்ததுக்கு சந்தோசப்படணும் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை