உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாக ஆய்வு அமைப்பு நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வென்று, இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார்.அதிபர் தேர்தல் தொடர்பாக, 'ஸ்மார்ட் எலக் ஷன்ஸ்' என்ற அமைப்பு, ரகசிய புலனாய்வை நடத்தியது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அதன் அறிக்கையில், பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.'புரோ வி அண்டு வி' என்ற தனியார் நிறுவனம், அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களை சரிபார்த்து, அவை சரியாக உள்ளதாக சான்றளிக்கும். இவ்வாறு பென்சில்வேனியா, புளோரிடா, நியூ ஜெர்சி, கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில், இந்த நிறுவனம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சான்றளித்தது.அதாவது நாட்டின், 40 சதவீத கவுன்டிகளில் உள்ள ஓட்டு இயந்திரங்களை இந்த நிறுவனமே பரிசோதித்து, சான்றளித்தது.அந்த நேரத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பல முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு செய்யப்படும் மாற்றங்களை, நான்கு உறுப்பினர்கள் உள்ள தேர்தல் உதவி கமிஷன் உறுதி செய்ய வேண்டும். இதில், இரண்டு பேர், டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.பொதுப்படையாக அறிவிக்காமல், அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்காமல், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன் தாக்கம், பல இடங்களில் தெரிய வந்தது. குறிப்பாக முக்கிய இரண்டு கட்சி அல்லாத மற்றொரு கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு, நியூயார்க்கின் ராக்லேண்டு கவுன்டில், ஒன்பது பேர் ஓட்டளித்துள்ளனர். ஆனால், 5 ஓட்டுகள் மட்டுமே அவருடைய பெயரில் பதிவானது. இதுபோல மற்றொரு இடத்தில், 5ல் 3 மட்டுமே அந்த வேட்பாளர் பெயரில் பதிவாகியுள்ளது.இது சிறிய கட்சிகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில், கமலா ஹாரிசின் பெயர், முதல் வரிசையில் இல்லாமல், கீழே தள்ளப்பட்டிருந்தது.ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினரான கிறிஸ்டன் கிளிபிராண்டின் நியூயார்க்கின் சில பகுதிகளில், கமலா ஹாரிசுக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை.ஜனநாயகக் கட்சி மிகவும் வலுவாக உள்ள இந்த மாகாணத்தில், குடியரசு கட்சியின் அனைத்து செனட் உறுப்பினர்கள் பெற்றதைவிட, டொனால்டு டிரம்புக்கு கூடுதலாக, 7.50 லட்சம் ஓட்டுகள் கிடைத்துஉள்ளன.இவற்றில் இருந்து திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகிறது.தேர்தலுக்கு முன்னதாக, ஒரு பிரசார கூட்டத்தில், தன் ஆதரவாளரான தொழிலதிபர் எலான் மஸ்கை, டொனால்டு டிரம்ப் பாராட்டி பேசினார். 'அவரால், எந்த கம்ப்யூட்டரையும் ஹேக் எனப்படும் உள்ளே புகுந்து மாற்ற முடியும்' என, பாராட்டினார்.மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசிய எலான் மஸ்க், 'எதற்குள்ளும் நுழைந்து மாற்ற முடியும்' என, கூறினார். மேலும், சமீபத்தில் டிரம்புடன் மோதல் ஏற்பட்டபோது, 'என் உதவி மட்டும் இல்லையென்றால், டிரம்பால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்று கூறினார்.இவற்றை வைத்து பார்க்கும்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தே டிரம்ப் வென்றுள்ளார். தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும் நடந்திருந்தால், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட கவுன்டியில் நடந்த தேர்தல் தொடர்பாக, ஸ்மார்ட் எலக் ஷன் அமைப்பு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதை விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.தற்போதைய நிலையில், அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும், அல்லது முறைகேடுகள் நடந்ததா என்று விசாரணை நடத்தினாலும் அதனால், எந்தப் பயனும் இருக்காது என்று கூறப்படுகிறது. பார்லிமென்டின் இரண்டு சபைகளும், டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வானதை அங்கீகரித்துள்ளன. அதை மாற்ற முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூன் 11, 2025 20:34

இவர் இந்தியா வந்து ட்ரைனிங் எடுத்துச் சென்றாரோ?


Varuvel Devadas
ஜூன் 11, 2025 11:35

It is a proven fact that EVMs can be tampered. Elections should be conducted using ballot boxes, thereby a solution could be found to all these problems.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 11:02

இவர்கள் இரகசிய சர்வே செய்த பொழுது சுய பாதுகாப்புக்காக கூட மாற்றி ஓட்டு போட்டதாக வாக்காளர்கள் கூறி இருக்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 11, 2025 09:38

தேர்தல் தில்லுமுல்லுகளில் புகழ்பெற்ற, புதுப்புது வகையான கள்ள ஓட்டு போடுவதில் திறமை வாய்ந்த திமுகவினரிடம் டிரம்பு கட்சியினர் பயிற்சி பெற்று நடந்தால் டிரம்பு தான் நிரந்தர அமெரிக்க அதிபர்.


Subash Sadasivan
ஜூன் 11, 2025 08:17

It's been ed in India and ensured that no one can it , so it's been maintained well in India and America need to learn from us


visu
ஜூன் 11, 2025 08:10

அப்ப நிதின் நியாயாமாக வென்றார்ரா இப்படித்தான் இந்த இடது சாரி அமைப்புகள் அவங்களுக்கு எதிரான யார் வென்றாலும் புரளியை கிளப்பி விடுவாங்க


தியாகு
ஜூன் 11, 2025 07:19

Ok Sir, In India, if BJP wins an Election then all parties will tell voting machine ed to favor BJP. If Pappus Congress party wins an Election, then no one ing their mouth. What about your opinion on this?


Ramanujam Veraswamy
ஜூன் 11, 2025 05:16

Probably, Mr. Trump would have got trained by Indian Political Leaders, before election, regarding rigging in election. Unfortunately Indian Election Commission refuses to switch back to ballot papers and it raises eye brows of helpless common voters.


Shiva
ஜூன் 11, 2025 06:34

How do you say this? Do you have any proof? The EVMs were proved technology tramp proof ones. Try to post without any bias in the social media. Don't try to pollute the public.


SANKAR
ஜூன் 11, 2025 06:49

as far as I know USA does NOT use voting machines of the sirt we use.they still use paper.those living in USA may clarify this seems to be a smear campaign against a truly nationalistic President.many did not want Trump to become President and take harsh action to protect American interests that was why three unprecedented assassination attempt was made in pre election level itself


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 11:06

நமது இந்திய ஓட்டு பதிவு இயந்திரங்கள் எந்த சாஃப்ட் வேர் அடிப்படையாக கொண்டு இயங்குவது இல்லை. இந்திய ஓட்டு பதிவு இயந்திரங்கள் பழைய தொழில்நுட்பம் மூலமே இயங்குகிறது. சாஃப்ட் வேர் இருந்தால் தான் மால் வேர் வைரைஸ் மூலம் உள் நுழைந்து தற்போது பணம் காசு அக்கவுண்ட் இருந்து திருடுவது போல் ஓட்டுகளை மாற்ற முடியும்.


Kalyan Singapore
ஜூன் 11, 2025 04:45

அமெரிக்காவில் ஓட்டுப்பதிவு இயந்திரம் இல்லை. இன்னும் வாக்குச்சீட்டு தான். அதனால் இந்த செய்தி குறித்து சந்தேகம் வருகிறது


Savitha
ஜூன் 11, 2025 11:00

correct


சமீபத்திய செய்தி