உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

கோவை: SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து தமிழரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதி ஆக்கி உள்ளார். தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=867fuqr9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாஜ சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருக்கிறோம். பருவமழை தவறாமல் வந்துள்ளது. சார் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. அண்ணா பல்கலை சம்பவத்தில் இருந்தே, சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திமுகவினர் சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு பயம். கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது நீக்கல், சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள் எதற்கு அஞ்சுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? தோல்வி பயத்தால் திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மிளிரும் தமிழகம்!

இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்கும் விதமாக, பிரதமர் மோடி கொண்டு வந்த மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் ரூ.5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்பிற்குரியது. அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது மத்திய அரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. ரூ.4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள பிரதமர் மோடிக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றி. தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும் நாளும், நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mario
அக் 28, 2025 17:43

ரூ.நாலரை கோடி என்று சொன்னாலே நயினார் நாகேந்திரன் ஒரு அலர்ஜி: மக்கள் கேள்வி


Pandianpillai Pandi
அக் 28, 2025 16:19

ட்ரைன்ல உங்க ஆளுங்க கோடி ரூபாய் பணத்தோடு பிடிபட்டார்களே அது என்னங்க ஆச்சு . மோடி புகழ் பாடுகிற வானம்பாடிகள் கோடிகளில் புரள்கிறார்கள் கேட்டால் அன்பளிப்பு மூலம் பெற்றோம் என்று சொல்கிறார்கள். நாகரிகம் கருதி sir க்கு விளக்கம் அளிக்க மனம் வரவில்லை. பீகார் கூத்து மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டால் பிஜேபி க்கும் கோபம் பொத்துக்கொண்டு வருது. நாகத்துக்கு விஷம் அதை தற்காத்துக்கொள்ள தான். நீங்க விஷம் கக்குறது விசம பேச்சும் உங்களுக்கே பயன் தராது. ஒவ்வாமை வியாதியுடன் திகழும் பாஜக க்கு எதை பார்த்தாலும் அலர்ஜியாக தான் தெரியும்.


sankar
அக் 28, 2025 17:17

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்பது வழக்கமான ஒரே நடைமுறை, மோடி அரசின் மீது குறை சொல்லமுடியாத செல்லாக்காசுகள் வேறு எதையாவது புலம்புகிறார்கள்.


Iyer
அக் 28, 2025 15:11

ஊழலில் ஊறிய குடும்பக்கட்சிகள் எல்லோருக்கும் SIR என்று சொன்னாலே அல்ர்ஜி தான். மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், UP ல் அகிலேஷ், பிஹாரில் RJD, மேற்குவங்கத்தில் மம்தா இவர்கள் எல்லோரும் பங்களாதேஷி வோட்டுக்களால் தான் இன்றும் அரசியலில் பிழைத்து வருகிறார்கள். SIR க்கு பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் பிஜேபி ஒன்று தான் நாட்டில் நிலைத்து நிற்கும்.


kar8
அக் 28, 2025 13:42

நம்ம சார் என்பதால் விட்டுவிட்டார்கள் சார்.


Shankar C
அக் 28, 2025 13:19

வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அரசுக்கும், அரசாளும் கட்சிக்கும் ஒரு கடமையாகும்.


sankar
அக் 28, 2025 12:46

யார் அந்த சார் என்று கேட்டால் பிறகு கோவம் வராதா


திகழ்ஓவியன்
அக் 28, 2025 12:30

வோட்டு திருடர்களுக்கு அது கை வந்த கலை ஏனெனில் இப்படி எல்லாம் தில்லு முள்ளு செய்தால் தான் வெற்றி பெற முடியும்


sankar
அக் 28, 2025 12:46

திமுக இப்படித்தான் ஜெயிச்சுதா சார்


Suppan
அக் 28, 2025 16:02

திகழு இந்த "SIR" ஐ செய்யபோவதே தமிழக அரசு அலுவலர்கள்தான். அவர்கள் தில்லு முல்லு செய்யப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிவித்திருக்கிறீர்கள். பரவாயில்லையே. இன்று வர வேண்டிய இருநூறு வரவில்லையா ? அண்ணா பல்கலை "சாரை " வெற்றிகரமாக மறைத்தாயிற்று. ஆனால் இந்த "SIR" ??


புளுகு ஓவியன்
அக் 28, 2025 17:54

கழகத்தாருக்கு ஓட்டு திருட்டு என்பது கை வந்த கலை,உட் கட்சி தேர்தலில் கூட கள்ள ஓட்டும் ஆள்மாறாட்டமும் சகஜம்தான் , இந்த விசயத்தில் இந்தியாவில் இவர்களை யாரும் ஜெயிக்க முடியாது .


Rajkumar
அக் 28, 2025 12:21

ஏமாற்று வேலையே அதை வைத்து தான் செய்கிறீர்கள். எல்லாருக்கும் அலர்ஜி தான்.


Balasubramanian
அக் 28, 2025 11:43

அந்த சார் யார் என்று இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லையா?


Vasan
அக் 28, 2025 12:20

கண்டு பிடித்து விட்டார்கள், விட்டு விட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை