உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?

காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது, புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, 1,000 அமெரிக்க டாலர் குழந்தையின் வங்கிக் கணக்கில் வைக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmglua2b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பணத்தை, 18 வயதான பிறகே அவர்களால் எடுக்க முடியும். 2025 ஜன., 1 முதல் 2028 டிச., வரை பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். அந்த குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதோடு, அமெரிக்க சோஷியல் செக்யூரிட்டி எண் வைத்திருக்க வேண்டும்.இந்த திட்டம், ஏற்கனவே நம் நாட்டின் ஐந்து மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதன் முறையாக, 1992ல் தமிழகத்தில் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டத்தை கொண்டு வந்தார். ஒருவருக்கு ஒரே பெண் குழந்தை இருந்தால், அந்த குழந்தையின் பெயரில் 50,000 ரூபாய் நிரந்தர வைப்பு வாயிலாக வங்கியில் வரவு வைக்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின், இருவருக்கும், தலா 25,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.இவர்களுக்கு, 18 வயதாகும் போது இந்த பணம் அவர்களுக்கு கிடைக்கும். 'இதே திட்டதை தான் டிரம்ப் காப்பி அடித்துள்ளார்' என்கின்றனர். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, பதவிக்காக எதுவும் செய்வர் என்பது நம் நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை, டிரம்பின் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mindum vasantham
பிப் 01, 2026 08:19

அமெரிக்கா அதிபருக்கும் கார்போரேக்கும் எதோ சண்டை, அமெரிக்கா அதிபர் நினைத்தாலே அங்கே எதுவும் செய்ய முடியாது


Sun
பிப் 01, 2026 07:45

இதுவே திராவிட மாடல் திட்டமா இருந்து டிரம்ப் அதை காப்பி அடித்து இருந்தால் இந்நேரம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி தான் அகில உலகத்திற்கே முன்னோடி என்ற ரேஞ்சுக்கு இங்கு அலப்பறை இருந்திருக்கும்!


Kasimani Baskaran
பிப் 01, 2026 06:15

இது போன்ற பல திட்டங்கள் சிங்கப்பூரை காப்பி அடித்து செயல்படுத்தப்படுபவை.


Senthoora
பிப் 01, 2026 06:59

சிங்கப்பூருக்குமுன் பலநாடுகளில் குழந்தை நலத்திட்டத்தின் பேரில் செயல் படுத்தப்படுகிறது, லிபியாவிலும், இந்தியா, இலங்கையிலும் பல காலமாக இலவச மருத்துவ, தொழில்நுட்ப, வர்த்தக படிப்புகள் இருந்தது.


karupanasamy
பிப் 01, 2026 07:12

ம்ம்ம்ம் பி எப் கணக்கு????


Govi
பிப் 01, 2026 05:21

நல்ல தலைவி கூட நட்பு. உயிர பறித்து விட்டது


முக்கிய வீடியோ