| ADDED : பிப் 13, 2025 07:06 AM
வாஷிங்டன்: 'ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர மிக நெருக்கமாக பணியாற்றுவேன்' என ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து, உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அவர் அதிபராக பதவியேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது, அவர் ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ejl2soav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர், போரை முடிவுக்குக் கொண்டு வர மிக நெருக்கமாக பணியாற்றுவேன் என ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அழைத்து உரையாடலைப் பற்றி அவருக்குத் தெரிவிப்பேன். அதை நான் இப்போது செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, ரஷ்யாவிற்கு வருமாறு அதிபர் டிரம்புக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் அவர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான டிரம்பின் சிறப்பு தூதர் ஆகியோர் இந்த வார இறுதியில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர். அங்கு உக்ரைனின் நிலைமை ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.