உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகளுக்கு விலக்கு: அறிவித்தார் டிரம்ப்

பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகளுக்கு விலக்கு: அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினி போன்ற பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விலக்கு அளித்துள்ளார்.அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மற்ற நாடுகள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்போம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதத்தையும் அவர் வெளியிட்டார். சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான இந்த பரஸ்பர வரியை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். அதே நேரத்தில் சீனா மீது, 145 சதவீத வரியை விதித்தார்.இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்பிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் இதுவரை 20பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.இவற்றில் செமி கண்டக்டர் அடிப்படையிலான மின்னணு கருவிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அடிப்படை வரியான, 10 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான மின்னணு சாதனங்கள், உதிரி பாகங்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஏப் 13, 2025 21:52

நல்லதுதான். உலகிலேயே அதிக மொபைல் போன் ஏற்றுமதி செய்வது நம்நாடுதான்.


காளையன்
ஏப் 13, 2025 19:51

அடுத்த வாரம்.பங்குச் சந்தை கொஞ்சம் மேலே போகும். கணினி, வங்கி பங்குகளில் ஆப்ஷன் வாங்கினால் பணம் பண்ணலாம். மத்தபடி பெரிய மாறுதல் இருக்காது.


sankaranarayanan
ஏப் 13, 2025 17:03

இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு மிக மிக சாதகமான அறிவிப்பு இந்திய அமெரிக்க உறவு மேன் மேலும் தீவிரமடையும்


கண்ணா
ஏப் 13, 2025 08:56

அங்கே சைனா பொருள் இல்லையென்றால் எல்லா மின் பொருள்கள் ஸ்டாப்......


SANKAR
ஏப் 13, 2025 10:21

ingeyum adhe


Velan Iyengaar
ஏப் 13, 2025 08:28

துக்ளக் தர்பார் நம் நாட்டுக்கு சரியான போட்டி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை