உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்: அதிபர் டிரம்ப் சஸ்பென்ஸ்!

இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்: அதிபர் டிரம்ப் சஸ்பென்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஜூலை 9ம் தேதி 90 நாள் வரி நிறுத்தம் முடிவடைவதால், ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்தன. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்போகிறோம் என நினைக்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wp1556rt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அது ஒரு வேறு விதமான ஒப்பந்தமாக இருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுவதற்கு ஏற்ற ஒரு ஒப்பந்தம் அமையும். அது மிகக் குறைந்த வரிகளைக் கொண்டிருக்கும். அந்த ஒப்பந்தம் வாயிலாக நாமும், இந்தியாவில் பொருள் விற்க முடியும். இப்போது இந்தியா யாரையும் பொருள் விற்க அனுமதிப்பதில்லை. இந்தியா அதை செய்யும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்தியாவின் புதிய பரஸ்பர வரி விகிதம் தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 02, 2025 15:51

அதிக வரி விதித்தாலும் ஒத்துப்போம். அதை அமெரிக்க மக்கள் தலையில் கட்டிரலாம். அதிக இறக்குமதியை அனுமதித்தால் இங்கே உள்ளுர் கார்ப்பரேட்களுக்கு ஆபத்து. ஒத்துக்க மாட்டோம்.


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 14:06

வர வர இந்த ட்ரம்பை நம்ப முடியல சொல்வது ஒன்று செய்வது வேறு என்று மாற்றி மாற்றி பேசுகிறார் அதனால் இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை