உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி; சொன்னதை செய்தார் டிரம்ப்!

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி; சொன்னதை செய்தார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப், ''அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்,'' என வெளிப்படையாக பேசி இருந்தார். சொன்ன வாக்கை டிரம்ப் காப்பாற்றி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lpjxecbp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் எனது அரசில் பணியாற்றுவதற்கும், வீண் செலவை குறைக்கவும், அமெரிக்காவை காப்பாற்றுவதற்கும் தேவைப்படுகிறார்கள்.2026ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிக்குள் அவர்களின் பணி முடிவடையும். சுதந்திர பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் திறமையான அரசாங்கம் அமைந்திருப்பது நம் நாட்டிற்கு கிடைத்த பரிசு' என குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடன், அமெரிக்கா ஒரு தகுதியான, சமரசமில்லாத தலைவரை அதிபராக பெற்றுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Natarajan V
நவ 13, 2024 16:35

ஒரு நாள், மோசடி நடவடிக்கைகளுக்காக மஸ்க் சிறையில் இருக்கக்கூடும். அவரது நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அவர் செய்யும் வணிகம் என் மனதில் சேரவில்லை, அதற்கும் மேல் மற்றொரு டிரம்ப்புடனான அவரது தொடர்பு மர்மமாக உள்ளது. ராக்கெட்டை மீண்டும் தரையிறக்கும் பணிக்கு அவர் நிதியளித்தார் - அது சுவாரஸ்யமாக உள்ளது, ஆனால் டாலர் எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி குறி.


Sridhar
நவ 13, 2024 14:28

மிகச்சிறந்த ஒரு முடிவு. இந்தியாவிலும் அவ்வாறு செய்து திருட்டு கும்பல் செய்யும் மக்கள் விரோத கொள்ளைகளை அம்பலப்படுத்த வேண்டும். ஒரு தமிழ் பிராமணர் அமெரிக்காவின் உன்னதமான பெருமை மிக்க குடிமகனாக இருக்கிறார் என்பது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இந்திரா நோயி, சுந்தர் பிச்சை போன்றவர்கள் வரிசையில் இப்போது விவேக்


Nellai Ravi
நவ 13, 2024 13:39

கமலா ஹாரிஸ் பிராமணர் அல்லர்.


morlot
நவ 14, 2024 14:36

விவேக் பிராமின


Natesan Narayanan
நவ 13, 2024 12:51

அவர்கள் அனைவரும் இந்தியவம்சத்தினர் .


venkatan
நவ 13, 2024 12:36

இனி குடியேற்ற விதிமுறைகள் கடுத்தமாகும் என்று அறிவித்திருக்கிறார்.


Kumar Kumzi
நவ 13, 2024 11:34

அதானி அதானினு ஊளையிடும் கொத்தடிமை கூமுட்ட கூட்டம் இப்போ இன்னும் கதறுவனுங்களே


Shankar
நவ 13, 2024 11:00

இப்போ என்ன பிரச்சினை? பிராமணர்களை பூமி அல்ல, பிரபஞ்சம் உள்ளவரை ஒன்றும் அசைத்து பார்க்க முடியாது.


Ram pollachi
நவ 13, 2024 10:39

பார்க்க தான் அப்பாவி தோற்றம், இன்னும் என்ன என்ன செய்ய போகுதோ தெரியவில்லை.


R Devarajan
நவ 13, 2024 10:09

விவேக், உஷா வான்ஸ், கமலா ஹாரிஸ் மூவரும் ப்ராஹ்மணர்கள்


Anand
நவ 13, 2024 14:43

நீக்ரோ எப்போது பிராமணர் ஆனார்?


அப்பாவி
நவ 13, 2024 09:10

விவேக் நாலே விவரம்தான். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே துண்டு போட்டுட்டாரு.


R Devarajan
நவ 13, 2024 10:29

தமிழ் நாட்டின் நஷ்டம்