உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பு; முந்தைய ஆட்சியாளர்களை காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பு; முந்தைய ஆட்சியாளர்களை காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்துள்ளனர். இதற்கு முந்தைய அமெரிக்கத் தலைமை தான் காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d8p9i1yn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி 25 சதவீதம் அடுத்த மாதம் முதல் தொடங்கும். மார்ச் 4ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள பரஸ்பர வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மெக்சிகோ, கனடா மட்டுமல்ல, பல நாடுகள் எங்களை பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு நாங்கள் சரியான நேரத்தில் வரி விதிப்போம். உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து, துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இது நடக்க காரணமாக இருந்த அந்நாடுகளை குறை கூறவில்லை. முந்தைய அமெரிக்கத் தலைமையைத்தான் குறை கூறுகிறேன். நாங்கள் பரஸ்பர வரியை விதிக்க விரும்புகிறோம். எங்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலாக நாங்களும் அதிக வரியை விதிப்போம். இது நாட்டிற்கு மிகவும் நல்லது. நமது நாடு மீண்டும் பணக்காரராக மாறும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
பிப் 25, 2025 13:02

அணைத்து அரசியில் வியாதிகளும் ஒரே மாதரி தான் இருக்கானுக போல


abdulrahim
பிப் 25, 2025 09:48

முந்தைய ஆட்சியாளர்களை கைகாட்டி தப்பிக்கும் இந்த கீழ்த்தரமான யோசனை சொன்ன அந்த தண்ட தீவட்டி கூட அதிக நேரத்தை செலவிட்டதின் தாக்கம் தெரிகிறது .....


Jay
பிப் 25, 2025 08:40

அமெரிக்கா காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள், இந்த ஆட்சியிலோ முந்தைய ஆட்சியிலோ. உலகத்தின் பெரிய அண்ணன் ஒவ்வொரு வகையிலும்.


அப்பாவி
பிப் 25, 2025 08:29

நேருதான் காரணம்னு சொல்லிடுங்க ட்ரம்ப். யாரும்.கேள்வி கேக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை