உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பின் அதிரடிக்கு சீனாவின் பதிலடி; நிலக்கரி, எரிவாயுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு

டிரம்பின் அதிரடிக்கு சீனாவின் பதிலடி; நிலக்கரி, எரிவாயுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு

பீஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில், கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, டிரம்ப் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ylyi0bcz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா துவங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரியும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இதனால் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலக வர்த்தக அமைப்பை நாடியது சீனா!

அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி உயர்வுக்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சீனா பொருட்களுக்கு மீது கூடுதல் வரிகளை விதித்து உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியுள்ளது. இந்த நடவடிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது. அமெரிக்கா தனது வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 04, 2025 16:49

இந்தியா நேற்றே டிரம்ப் க்கு அடி பணிந்து விட்டது. ஹார்லே டேவிட்சன் மோட்டார் பைக் களின் மீது இருந்த இறக்குமதி வரியை பாதியாக குறைத்து விட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு அமெரிக்க இறக்குமதி பொருட்களின் வரிகள் குறைக்கப்படும். அதை சரிக்கட்ட உள்நாட்டுப் பொருட்கள் மீது வரி உயர்த்தப் படும். ஜெய் ஜெகன்னாத்


Barakat Ali
பிப் 04, 2025 18:12

உமது ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் கொண்டுவந்த உலகமயமாக்கல்தான் காரணம் ..... அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்து வருகிறது ..... நாம் அதில் சாதிக்க சில சமரசங்களை செய்துகொள்ள வேண்டும் .....


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
பிப் 04, 2025 20:13

அதெப்படி இந்தியாவை மட்டம் தட்ட வேண்டும் என்றால் அறிவாலயத்தில் இருந்து கழுத்தில் கட்டியிருந்த இரும்பு சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி வந்து கருத்து என்ற பெயரில் விஷத்தை கக்குகிறாய் உன்மையிலே உன் பெயர் வைகுண்டம்தானா? அல்லது அறிவாலய ஜோம்பியா?


Mohammad ali
பிப் 04, 2025 20:30

எப்படி? காங்கிரஸ்காரன் US காரன்


Senthoora
பிப் 04, 2025 15:15

அப்போ அமெரிக்காவும் கூடுதல் வரி போட்டிருக்கே, இந்தியாவுக்கும் சீக்கிரம் வரி உயர்வு இருக்காமே?


Kasimani Baskaran
பிப் 04, 2025 14:16

சீனாவின் ஒருதலைப்பட்சமான வர்த்தக சூழ்ச்சிகள் மகா கேவலமானவை. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிவந்தால் சீனாவில் பொருளாதாரம் இன்னும் கூடுதலாக படுத்து விடும்.


புதிய வீடியோ