உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்பைவிட வலிமை பெறப்போகும் அமெரிக்கா; நாட்டு மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்

முன்பைவிட வலிமை பெறப்போகும் அமெரிக்கா; நாட்டு மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இன்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கும் அதிபர் டிரம்ப், 'இதுவரை இல்லாத அளவில் அமெரிக்கா வலிமை பெறப்போகிறது,' என்று கூறியுள்ளார். இதனால், அவர் எதைப்பற்றி பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம், வெனிசுலாவுடனான போர் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னிலையில் உள்ள சவால்களாகும். இந்த சூழலில், இன்றிரவு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இன்றிரவு நான் எதைப்பற்றி உரையாற்றுகிறேன் என்றால், நாம் குழப்பமான மரபைக் கொண்டுள்ளோம். தற்போது, நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்து முடித்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா வலிமைப் பெறப் போகிறது,' எனக் கூறினார்.அதிபர் டிரம்ப் எதைப் பற்றி உரை நிகழ்த்தப் போகிறார் என்பது பற்றி வெளிப்படையாக கூறாத நிலையில், வரி விதிப்பு போல ஏதேனும் புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறாரா? அல்லது வெனிசுலா பற்றிய அறிவிப்பாக இருக்குமா? என்று மக்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
டிச 18, 2025 17:43

பாவம் டிரம்புக்கு மனா நிலை சரியில்லை என்று பலரும் கூறிவரும் நேரத்தில் அவருக்கும் பலபேர் பின்பற்றுபவர் இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்தான்.


ராமகிருஷ்ணன்
டிச 18, 2025 14:31

அமெரிக்க விடியலார் டிரம்பரின் புதிய உளரலை கேட்க மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்.


SUBRAMANIAN P
டிச 18, 2025 14:00

அமெரிக்கா ஆண்களுக்காக எதாவது வலிமை மாத்திரை கண்டுபிடித்திருப்பாரோ


Nathan
டிச 18, 2025 13:45

எப்படி வெனிசுலாவின் கச்சா எண்ணெய் திருடி விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது மூலமா இது போன்ற கேவலமான செயல் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு அமெரிக்க மக்கள் தின்னலாம்


கிருஷ்ணன்
டிச 18, 2025 13:37

அதிரடியாக, அடுத்த கனிமக் "கொள்ளை"யும், அதன் காரணம் தொடரும், கொள்கையின் பிடியில், இனி எந்த நாடோ ?


Field Marshal
டிச 18, 2025 13:06

ஏதாவது மாத்திரை கண்டுபிடிச்சுருக்காங்களா ?


Ramesh Sargam
டிச 18, 2025 12:40

அநேகமாக இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் விசா கட்டண உயர்வு இதுபோன்ற ஏதாவது ஒன்றாகத்தான் அவர் பேச்சு இருக்கும்.


RAMESH KUMAR R V
டிச 18, 2025 12:32

அடுத்த நோபல் பரிசு பற்றி பேசப்போகிறார்.


நிக்கோல்தாம்சன்
டிச 18, 2025 12:28

ஒருவேளை கார்பொரேட் குடும்பத்தை அங்கே குடியேற செய்யபோகிறாரா ? இல்லை தீவிரவாத நாட்டினரை ஒடுக்க போகிறாரா ?


Anand
டிச 18, 2025 12:15

அப்படி இப்படினு ஊரை அடித்து லம்பா ஆட்டையை போட்டுவிடலாம் என திட்டம் தீட்டிவிட்டான்.....


முக்கிய வீடியோ