உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல: சொல்கிறது பாகிஸ்தான்

தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல: சொல்கிறது பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: '' காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல,'' என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியுள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் மட்டும் அல்லாமல் உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் 'பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்கு வருத்தம் அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்' எனக்கூறியிருந்தது.இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் க்வாஜா ஆசிப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை நாங்கள் நிராகரித்து உள்ளோம். இந்தியாவில் நாகலாந்து முதல் காஷ்மீர் வரையிலும், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தென் மாநிலங்களில் புரட்சி நடக்கிறது. இதில், வெளிநாட்டினர் பங்கு கிடையாது. உள்ளூரை சேர்ந்தவர்கள் காரணம் எனக்கூறியதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

இந்தியன்
ஏப் 23, 2025 19:18

நீங்க காரணம்னு தெரிஞ்சா இப்பவே குண்டு மழை பொழிஞ்சிருக்கும். உங்க மூர்க்க அல்லக்கைங்க அதான் லஷ்கார் புண்ணாக்குங்க. அவிங்களை தேடி புடிச்சு உங்க ஊர்லேயே போட்டுத்தள்ளப்போறாங்க.


ramesh
ஏப் 23, 2025 18:39

இங்கே 2 முஸ்லிம்கள் தீவிர வாதிகளால் கொல்லப்பட்டு உள்ளார்கள் . அப்படி என்றால் இங்கு உள்ள முஸ்லிம்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வில்லையே .


Karthik
ஏப் 23, 2025 20:37

அதெப்படி.. 26 பேரில் ரெண்டு பேர் தானே முஸ்லிம்கள் மீதமுள்ள 24 பேர் இந்துக்கள் ஆயிற்றே.. 24 தானே பெரிது. பிறகு எப்படி குரல் கொடுப்பர். குரல் கொடுத்தால் பூனைகுட்டி வெளியே தெரிந்து விடுமே.


ராமகிருஷ்ணன்
ஏப் 23, 2025 18:08

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது சிறிய ரக கெமிக்கல் குண்டுகளை வீசி ஆய்வு செய்யலாம், சின்ன அணுகுண்டுகளை வீசலாம். முகாம்கள் இருந்த தடம் தெரியாமல் எரித்து விடலாம். பாக்கிஸ்தான் அரசை பற்றி கவலைபட தேவையில்லை. நாம் கொடுக்கும் பதிலடி எல்லா தீவிரவாதிகளையும் கதிகலங்க வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.


Karthik
ஏப் 23, 2025 20:29

அந்த நல்ல செய்தியை விரைவிலேயே நாம் கேட்போம் என்று நம்புகிறேன் - நம்புவோம்.


என்றும் இந்தியன்
ஏப் 23, 2025 16:23

என்ன கொலை கொள்ளை ஊழல் செய்தாலும் சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கின்றது இந்த டப்பா - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன, ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில். இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன. இந்துத்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன, கிறிஸ்தவர்களையும் பவுத்தர்களையும் சுரண்டுகின்றன. அவர்கள் கொல்லப்படுகிறார்கள், இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.


உண்மை கசக்கும்
ஏப் 23, 2025 14:35

இந்தியாவில் புரட்சி நடக்கிறதா எங்கே..?


KRISHNAN R
ஏப் 23, 2025 14:21

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தயவில் இருந்து வரும் நாடு


KRISHNAN R
ஏப் 23, 2025 14:18

போனவாரம் தான் அங்கேந்து கூவினான் ஒருத்தன்.... இப்போ அதை மறுத்தால் உண்மை என்று அர்த்தம்


Ranganathan PS
ஏப் 23, 2025 14:17

தகுந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்தப்படும்.


Madras Madra
ஏப் 23, 2025 14:04

இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு பயந்து பம்முது கூடிய விரைவில் வேட்டை ஆரம்பிக்கும்


தமிழ்வேள்
ஏப் 23, 2025 13:52

புரட்சியாளர்களை குருதி புனலில் புரட்டி எடுத்தால் , புரட்சியாவது ,புண்ணாக்காவது .....


சமீபத்திய செய்தி