உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்பதோஸ்; கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இங்குள்ள கார்பதோஸ், காசோஸ் தீவுகளுக்கு அருகே 14 கி.மீ., ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. தொடக்கத்தில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 6.1 ஆக திருத்தி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அதிர்வின் பாதிப்புகள், இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. முதல்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இருப்பினும், அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBBU,MADURAI
மே 14, 2025 09:16

இந்த ஆண்டு முடிவதற்குள் துருக்கியில் மிகப் பெரிய பூகம்பம் அதாவது 7.5 ரிக்டருக்கு குறையாமல் வர வேண்டும் என சிவ பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.


sundarsvpr
மே 14, 2025 08:17

பிறப்பு காப்பு இறப்பு இந்த மூன்றயையும் மனிதன் தன விருப்பப்படி செய்திட இயலாது. ஆண்டவன் கூட ஒவ்வொரு உயிர் உயிரில்லா இனங்களின் கர்மா வினையினை வைத்துதான் செயல்படுத்தமுடியும். மனப்பூர்வ பிரார்தனை மட்டும் விதி விலக்கு உண்டு. மனித குலம் தன்னால் முடியாது இரங்கி பிரார்த்தித்தால் கொடிய நிகழ்வுகளை குறைக்கவோ தடுக்கவோ முடியும். நம்பிக்கைதான் உலகம்.


புதிய வீடியோ