உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிர்ந்தது பூடான்: அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

அதிர்ந்தது பூடான்: அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திம்பு: பூடானில் ஒரே நாளில் இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் அடைந்தனர்.பூடானில் இன்று (செப்.8) மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 2.8 ஆக பதிவாகி இருக்கிறது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், மக்கள் அச்சம் அடைந்தனர் என்று அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.பூடானில் வழக்கமாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை விட, மிதமான நிலநடுக்கங்கள் ஆபத்தானவை. இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் நிலத்தின் மேற்பரப்புக்கு பயணிக்க குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்வதே இதற்கு காரணம். மேலும் இதன் மூலம் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று புவியியல் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A.GANESH KUMAR
செப் 08, 2025 22:47

இந்தியாவும் அலெர்ட்டா இருக்கணும் பழைய கட்டிடங்களை இடிக்க ஆர்டர் போடணும் .


Artist
செப் 08, 2025 15:15

ரெக்டர் ஸ்கெல் ஏழுக்கு மேல் தான் ஆபத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை