உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் ஆளும் கட்சி தலைவராக தேர்வு: புதிய பிரதமராகிறார் இஷிபா ஷிகெரு!

ஜப்பான் ஆளும் கட்சி தலைவராக தேர்வு: புதிய பிரதமராகிறார் இஷிபா ஷிகெரு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஷிபா ஷிகெரு தேர்வானார்.ஜப்பான் பிரதமராக பூமியோ கிஷிடா உள்ளார். இவரது ராஜினாமாவை அடுத்து பிரதமரை தேர்ந்தெடுக்க கட்சி கூட்டம் நடந்தது.ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின்(எல்.டி.பி) கூட்டம் இன்று பிற்பகலில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக இஷிபா ஷிகெரு(67) வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, அவர் ஜப்பானின் புதிய பிரதமராக, வரும் அக்.1ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.இஷிபா, ஏற்கனவே, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்தவர். இஷிபா ஷிகெரு கூறியதாவது: பிரதமராக இருந்த கிஷிடா, கட்சிக்கு முக்கிய முடிவுகள் எடுத்து, அதற்கு உயிர்ப்பித்துள்ளார். கிஷிடாவுடன் இணைந்து நாமும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.இவ்வாறு இஷிபா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ