உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்

ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர் குழு முன் வந்துள்ளது. இதனை நிராகரித்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென், 'எக்ஸ்' நிறுவனத்தை நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்து உள்ளார்.உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதில் பலவித மாற்றங்களை செய்துள்ள அவர், அதன் பெயரையும் 'எக்ஸ்' என மாற்றி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு சாட்ஜிபிடியை வடிவமைத்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்திற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருந்தார்.ஆரம்ப கட்டத்தில் ஓபன் ஏ.ஐ.,நிறுவனம் லாபமற்ற நோக்கம் கொண்ட நிறுவனமாக இருந்தது. பிறகு லாபத்தை நோக்கி மாற்றுவதற்கான முயற்சிகளில் அதன் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென் ஈடுபட்டார். இதனால், அதிருப்தியடைந்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தார். வழக்கும் தொடர்ந்தார்.இந்நிலையில், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரும், சில முதலீட்டாளர் குழுவும் சேர்ந்த அந்த நிறுவனத்தை 97 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கும் திட்டத்தை, சாம் ஆல்ட்மெனிடம் வழங்கி உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.ஆனால், இதனை நிராகரித்துள்ள சாம் ஆல்ட்மென், '' வேண்டாம் நன்றி. ஆனால், நீங்கள் விரும்பினால், 'எக்ஸ்' தளத்தை 9.74 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறேன்,'' என பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2025 21:50

அமெரிக்காவில் "இந்திய வெறுப்பை இயல்பாக்குவதற்கு" எதிராக இந்திய-அமெரிக்கர்கள் போராடி வருகின்றனர். எலோன் மஸ்க், இந்தியர்கள் மீது வெறுப்பு கொண்ட ஒரு பொறியாளரை அரசாங்க செயல்திறன் துறையில் DOGE மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்த பிறகு, நிஜ வாழ்க்கையில் இனரீதியான கொடுமைப்படுத்துதல் இயல்பானதாக மாறி வருகிறது. இதைப்பற்றி தினமலர் செய்தி வெளியிடவேண்டும் ....


அப்பாவி
பிப் 11, 2025 15:54

எலான் மஸ்க்கின் சொத்துக்கள் சாம் ஆல்ட் மேனின் சொத்துக்களை விட பல மடங்கு அதிகம். வெறும் வீராப்புக்காக ஆல்ட்மேன் அடிச்சு விடலாம். ஆனால், சாட்ஜிபிட்டி ய்யின் பங்குதாரர்கள் என்ன நினைக்கிறார்களோ அதான் நடக்கும்.


vijay
பிப் 11, 2025 12:53

ட்விட்டர் எலான் மஸ்க் வாங்கும் முன்னர் இலவசமாக இருந்தது, ஊதா நிற டிக் மார்க்-வேண்டுவோர் அதிகளவில் பின்பற்றுபவர்கள், அதிக செய்திகளை பகிருதல் போன்ற விதிமுறைகள் இருந்தன என்று நினைக்கிறேன். வணிக நோக்கத்திற்காக தனியாக பணம் செலுத்தி சில பயன்களை பெறுவதற்கு அலிகள் இருந்தன என்றும் நினைக்கிறேன். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டர்-ஐ வாங்கியபின்னர் மாதம் 800 ரொவாய் கொடுத்தால் ஊதா நிற டிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். பல பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியபின்னர் மாதம் 800 ரொவாய் என்பது என்ன லாபநோக்கமற்ற செயலா என்பதை அறிவுக்கொழுந்து எலான் மஸ்க் உலகிற்கு தெரிவிக்கவேண்டும்.


SUBRAMANIAN P
பிப் 11, 2025 13:21

அங்கேயுமா?


புதிய வீடியோ