உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசியல்வாதிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் ஐடியா

அரசியல்வாதிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் ஐடியா

வாஷிங்டன்: நாட்டில் ஊழலை ஒழிக்க அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.அமெரிக்காவில் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக, பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டு உள்ளார். அரசின் செலவை குறைக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவியை நிறுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=whjwu44r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழலை ஒழிப்பதற்காக, பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளால் பொது மக்களுக்கு ஆயிரம் மடங்கு செலவாகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

c.mohanraj raj
மார் 01, 2025 06:29

தினம் ஒரு கோடி கொடுத்தாலும் திருடுவான்


Kasimani Baskaran
பிப் 28, 2025 15:56

சிங்கப்பூரில் அரசியல்வாதிகளுக்கு சம்பளம் உலகிலேயே மிக அதிகம். மந்திரிகள் கிட்டத்தட்ட மாதம் $40,000 சம்பாதிக்கிறார்கள். அதிலும் சென்ற முறை ஈஸ்வரன் சைக்கிள் ஒன்றை லஞ்சமாக வாங்கி மாட்டிக்கொண்டார்.


Sankar SKCE
பிப் 28, 2025 15:41

வாய்ப்பே இல்லை ராஜா... இந்தியா வந்து பார் புரியும் மஸ்க்... அரசியல் வியாதின்னா என்னனு புரியும்.. சும்மா அமெரிக்கா உள்ளே பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரப்டாது சொல்லிப்புட்டேன் அம்புட்டுதான்.


Rajarajan
பிப் 28, 2025 14:21

போகாத ஊருக்கு ஒருவன் வழி கேட்டானாம். அதற்க்கு இன்னொருவன், புதுக்கம்பு பத்து படி என்றானாம். அரசியல்வாதிக்கு எவ்ளோ சம்பளம் தரணும் ? அரசின் மொத்த வருவாயில் மொத்தத்தையும் பிரிச்சி கொடுத்தடலாமா ?? இது ஒரு பதில், இதற்கு ஒரு பதவி, இது ஒரு அசைன்மென்ட்.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 13:09

சம்பளத்தை 176000 கோடி யாக உயர்த்திவிடலாம்.


ராமகிருஷ்ணன்
பிப் 28, 2025 12:49

எலன் மஸ்க் அவர்கள் திமுகவிடம் ஆலோசனை செய்து முடிவுக்கு வரனும் குறைந்த பட்சம் சம்பளம் 10000 கோடிகள் கொடுத்து ஊழல் செய்யாமல் தடுக்கலாம்.


A1Suresh
பிப் 28, 2025 12:40

டிஜிட்டல் கரென்சி வந்தால் மட்டுமே ஊழல் இந்தியாவில் ஒழியும். அதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம். அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.


Anbuselvan
பிப் 28, 2025 12:33

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? இருக்காது. ஆகையால் மிக அதிகமான தண்டனையுடன் மற்றும் வெகு விரைவான நீதி விசாரணையை முடிக்கவும் கூடவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது பதவியை தற்காலிகமாக தொடராமல் இருக்க வழி செய்தால் ஒரு வேளை அவர்களது ஊழல் நடவடிக்கைகள் குறையலாம். இது வரை ஊழலுக்காக சிறை சென்ற அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் இந்தியாவில்.


S.V.Srinivasan
பிப் 28, 2025 12:27

அரசின் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கறேங்கறாரு ஆனா செலவை அதிகமாக்க நடவடிக்கை எடுக்கறாரு. என்னங்க இது.


angbu ganesh
பிப் 28, 2025 12:20

கோடி கொடுத்தாலும் மாறாதய்யா மாறாது அரசியல் வியாதியும் ஊழல் புத்தியும்


புதிய வீடியோ