உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்; இன்று இளம் ஜோடி சுட்டுக் கொலை; இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!

அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்; இன்று இளம் ஜோடி சுட்டுக் கொலை; இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று(மே 22) இரண்டு இஸ்ரேல் தூதரக ஊழியர்கள்சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த ஒரு இளம் ஜோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 'பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் ஜெருசலேமில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது' என அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லெய்டர் தெரிவித்தார்.உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கூறியிருப்பதாவது: யாரோன் மற்றும் சாரா இரண்டு பேருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. வாஷிங்டனில் ஒரு பயங்கரவாதி அவர்களை சுட்டுக் கொன்றான். அவர்களின் கொலையால் முழு தூதரக ஊழியர்களும் மனம் உடைந்து பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர். இந்த பேரழிவு இழப்பில் எங்களது வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்கள் இதயங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான நேரத்தில் தூதரகம் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

மூர்க்கன்
மே 23, 2025 11:10

அட ரத்னா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிட்டிங்க?? மதம் பிடித்து ஆடாதீர்கள்?? அழிவு நிச்சயம்.


Vijay D Ratnam
மே 22, 2025 21:08

நேத்துதான் காஸாவில் 14000 குழந்தைகள் பசி பட்டினியால் சாவை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள், பிச்சை போடுங்க ஐயா என்று கெஞ்சி கதறிக்கொண்டு இருந்தார்கள். இன்று காஸாவுக்காக என்று சொல்லி இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை சுட்டுக்கொன்று இருக்கிறான். ஏற்கனவே இஸ்ரேலிய பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளுவது என்று உற்சாகமா கெளம்பிடுவான் இஸ்ரேல்காரன். இப்போ வந்து மிச்சம் மீதி இருக்குறவனையும் வந்து போட்டுத்தள்ளுடா என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறானுங்க.


morlot
மே 22, 2025 21:00

Hello your prime minister Netanyou has murdered so far 55000 in̈nocent pregnant ladies babies without any pity. Because you are juif community,so every thing is allowed for you. Now two diplomates were murdred,I hope you feel the pain.Also you are accusing our french président for hatred against israel. One day god will punish you severly.


Rathna
மே 22, 2025 18:58

இஸ்ரேல் பதிலடி கொடுக்கும். மனிதம் செத்து மதம் பிடித்து ஆடுகிறது.


S Srinivasan
மே 22, 2025 18:38

A palastheena opposition on Isreal


Narasimhan
மே 22, 2025 18:03

ரெண்டு பேருக்கு ரெண்டாயிரம் பேர் டார்கெட் வெச்சுடுவானுக


KavikumarRam
மே 22, 2025 18:22

கண்டிப்பா 2000 பேர் கொல்லப்படணும் . இப்படி எத்தனை நாளைக்கு தான் செய்யிறதையும் செஞ்சுட்டு விக்டிம் கேம் ஆடிக்கிட்டு இருப்பீங்க???


SUBBU,MADURAI
மே 22, 2025 19:33

நம்முடைய நாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நம் பிரதமர்தான் காரணம் என்று குற்றம் சொன்ன மாதிரி நாம் ஏன் இந்த இஸ்ரேலியர்கள் இருவரை கொன்றது அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் என்று குற்றம் சுமத்தக் கூடாது. எங்களுக்கு வந்தா இரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா


Karthik
மே 22, 2025 20:07

அப்படி வச்சா தான் அடுத்த முறை இது மாதிரி துப்பாக்கிய தூக்க யோசிப்பானுங்க.


Anand
மே 22, 2025 17:34

அதுவே இதற்கு நேர்மாறாக ஒரு இஸ்ரேலியர் மூர்க்க இளஞ்ஜோடிகளை சுட்டுக்கொன்றிருந்தால் உலகமே வெகுன்று எழுந்து கண்டன போராட்டம், முற்றுகை போராட்டம், என எல்லா இடமும் அல்லோல கல்லோல பட்டிருக்கும்.


Mecca Shivan
மே 22, 2025 17:34

இது ட்ரம்பின் இஸ்ரேலுக்கான எச்சரிக்கை ..


Karthik
மே 22, 2025 20:05

இது ட்ரம்பின் வேலையாக இருக்குமோ என்றுதான் எனக்கும் தோன்றுகிறது..


ராமகிருஷ்ணன்
மே 22, 2025 17:29

பாவம்யா. நிச்சயம் ஆவதற்கு முன்பே இறந்து விட்டார்கள். வீர சொர்க்கத்தில் இணை சேரட்டும்.