உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள்! 12 நிமிடங்கள் வட்டமடித்து நோட்டம்

எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள்! 12 நிமிடங்கள் வட்டமடித்து நோட்டம்

தாலின்: 3 ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி, தங்கள் நாட்டு வான்வெளியில் நுழைந்ததாக எஸ்டோனியா அறிவித்துள்ளது.ரஷ்யாவின் இந்த MIG 31 ரகத்தின் 3 போர் விமானங்களும் எஸ்டோனியா வான்வெளியில் நுழைந்ததை கண்ட நேட்டோ ஜெட் விமானங்கள் பறந்து வந்து இடைமறித்தன. கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ரஷ்ய விமானங்கள் அதே வான்வெளியில் இருந்தன.ரஷ்ய நாட்டின் இந்த ஊடுருவலை அடுத்து, எஸ்டோனியா ரஷ்ய தூதரை அழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சக்னா கூறுகையில், இந்தாண்டு 4 முறை ரஷ்ய அத்துமீறி இருக்கிறது. ஆனால், இன்றைய ஊடுருவல், 3 போர் விமானங்கள் வான்வெளிக்குள் நுழைந்தது, வெட்கக்கேடானது என்று கூறி உள்ளார்.போலந்து மீது நேட்டோ விமானம் ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. எஸ்டோனியா என்பது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ