உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தலைவர் ரேச்சல் ரிஸோ கூறியதாவது: இந்த சந்திப்பு ஐரோப்பிய தலைவர்களை அமெரிக்கா உடன் எப்படி நட்பு நாடாகத் தொடர முடியும் என்று கேள்வி எழுப்ப வழிவகுக்கும். இது உலக அரங்கில் அமெரிக்காவை பலவீனப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தலைவர் காஜா கல்லாஸ் கூறியதாவது: சுதந்திர உலகத்திற்கு ஒரு புதிய தலைவர் தேவை என்பது இன்று தெளிவாகிவிட்டது. இந்த சவாலை ஏற்றுக்கொள்வது ஐரோப்பியர்களான நம் கையில் தான் உள்ளது. உக்ரைனுக்கு எங்கள் ஆதரவை நாங்கள் அதிகரிப்போம். இதனால் அவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்துப் போராட வழி வகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஜெர்மனியின் பதவி விலகும் அதிபர் ஓலாப் கூறியதாவது: உக்ரைன் மக்களை தவிர வேற யாரும் அமைதியை விரும்புவதில்லை. நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். இந்த பயங்கரமான போரில் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறியதாவது: ஆக்கிரமிப்பாளர்களாக ரஷ்யா இருந்து வருகிறது. ரஷ்யாவால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே போராடி வருபவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் தங்கள் கண்ணியத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Karthik
மார் 01, 2025 23:53

எரிகிற நெருப்பில் மேலும் மேலும் எண்ணெயை ஊத்துது ஐரோப்பிய நாடுகள்..


சிட்டுக்குருவி
மார் 01, 2025 20:23

நாம குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதை கேட்டிருக்கிறோம். எரியும் வீட்டில் பிடுங்கணளவு லாபம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.இவை எல்லாமே பொருந்தும் இந்த நிகழுக்கு.உக்ரைன் ரஷியாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டு மக்கள் சொள்ளனா துயரத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் நான் அமைதியை ஏற்படுத்துகிரேன் என்று கூறி உங்கள் நாட்டில் உள்ள வளங்களையெல்லாம் எங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு போங்கள்,நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே உதவி செய்துவிட்டோம்,அதற்க்கு ஈடாக என்று கூரினால் எப்படி இருக்கின்றது. ஓகே நாங்கள் அப்படியே செய்கின்றோம் ஆனால் எங்களுக்கு இனிமேல் போர் ஏற்படாது என்று உத்திரவாதம் கொடுங்கள் நாங்கள் அவ்வாறே செய்கின்றோம் என்றால்,அதெல்லாம் முடியாது,நாங்கள் கூறும் அகிரீமெண்டில் கை எழுத்து போட்டு செல்லுங்கள் உங்களுக்கு அமதி தானாக வரும் என்றால் யார்தான் நம்புவார்கள்.அதுதான் நடந்தது ஆனால் செய்திகள் எல்லாம் விரிவாக வரவில்லை.அதனால் உக்ரைன் பற்றி தவறான பதிவுகள் வருகின்றது.


djivagane
மார் 01, 2025 17:17

அமெரிக்காவும் அவர்கெல் வங்கிகளும் இல்லெயென்றால் ஐரோப்பாநாடுகெள் கிடேயாடு


Thirumal Kumaresan
மார் 01, 2025 16:52

போர்தேவை இல்லாத ஓன்று, உடனடியாக நிறுத்த படா வேண்டும்,அப்பாவி மக்கள் கஷடபட கூடாது, இந்த இரண்டு நாட்டு தலைவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து மோத விட வேண்டும் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:05

without us aid the begger cannot fight for a day, gaura pitchaikaran, he will sign rare minerals deal, even Russia signs the rare minerals deal with US..


Barakat Ali
மார் 01, 2025 13:45

ஜெலன்ஸ்கி நமம துக்ளக் மன்னர போல இன்டெலிஜெண்ட் ....


ஆரூர் ரங்
மார் 01, 2025 12:33

இனியும் ரஷ்யாவை விட்டுவைத்தால் ஒரு ஐரோப்பிய நாடும் மிஞ்சாது. உக்ரைன் நாட்டை பிடிக்க விட்டால் அடுத்து சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா நிச்சயம் படையெடுக்கும் ஆபத்துள்ளது. இன்னொரு சீனா போல ஆவதற்கு முன் ரஷ்யாவை அடக்குவது நன்று . ஆக்கிரமிப்பு ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பவன் அறிவற்றவன்.


Svs Yaadum oore
மார் 01, 2025 13:21

ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை நிர்மூலமாக்க வேண்டுமா ??.....இது கனவில்தான் நடக்கும் ....ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை தூண்டி விட்டு போரில் உக்ரைன் மக்களை பலி கொடுத்தது ஐரோப்பிய நாடுகள் ....தூண்டி விட்டு பிறகு அதே ரஷ்யாவிடம் பெட்ரோல் எரி வாயு மட்டும் 600 மில்லியனுக்கு சென்ற ஆண்டு வாங்கியது பிரான்ஸ் .....யார் அறிவற்றவன் என்பதை பிரான்ஸ் ஜெர்மனியிடம் கேட்க வேண்டியதுதானே ...


Ganapathy
மார் 01, 2025 12:33

இந்த ஐரோப்பிய இடதுசாரி நரிநாடுகள் முன்பு போலந்தையும் யூகோஸ்லாவையும் பங்கு போட்டது போல யூக்ரைனையும் உசுப்பேத்தி பங்கு போடத்தான் போகின்றன விரைவில் இவன உசுப்பேத்தியே.


Oru Indiyan
மார் 01, 2025 12:32

டிரம்ப் சர்வாதிகாரி என்று மறுபடியும் மறுபடியும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்


Ganapathy
மார் 01, 2025 12:30

மொதல்ல ஐநா என்ன செய்கிறது? யுக்ரேனும் ரஷ்யாவும் உறுப்பு நாடுகள் தானே அங்கு? எதற்காக அமெரிக்கா இனிமேலும் இங்கு தலையிட்டு பணமும் ஆயுதமும் இலவசமாககொடுக்கும்? கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்தப் போர் நடந்து வருகிறது.. இந்த ஜெலன்ஸ்கி செய்த பல தவறுகளில் ஒன்று கடந்த அமெரிக்க தேர்தலில் இவன் ஒரு வெளிநாட்டு குடிமகனாக அதுவும் அதிபராக மூளையற்ற முறையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு மஸாஸூட்ஸ் மாநிலத்தில் இடதுசாரிகள் கேட்டாங்கன்னு பைடனுக்காக பிரசாரம் செய்தது இதுதான் மம்தாவும் 2019ல் பங்களாதேஷ் நடிகரை கொண்ணாந்து தனக்காக பிரசாரம் செய்யவச்சது. எல்லா இடதுசாரிகளும் ஒரே போலத்தான் யோசிக்கிறார்கள் இது மிகப்பெரிய குற்றம். மேலும் அமெரிக்க வரியில் 350 மில்லியன் பணமும் ஆயுதங்களும் கொடுத்தும் இவனால் போரில் வெல்ல முடியவில்லை. இதற்க்கும் மேல் இவன் போர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததும் அடிக்கடி பணம் கேட்டு பைடன் சர்காரில் வாங்கியதும் அதற்காக ஒருமுறைகூட அமெரிக்க அரசுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லாததும் என பல இதுபோன்ற காரணங்கள்தான் இந்த ஆட்சில இந்த பேச்சு முறிவுக்கு காரணம். மக்களால் தேர்தல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபரை சந்திக்க கேஜரிவால்தனமா உடை அணிந்து சென்று கேட்டபோது திமிராக இவன் பேசியதுதான் இந்த பேச்சுவார்த்தையை திசைதிருப்ப முக்கிய காரணம். இனி இவன் புடினின் பேசணும்....ஐரோப்பிய ராஜதந்திரம் இதுவரை காஜா போரை நிறுத்தியுள்ளதா? கொரியா பிரச்சனையை தீர்துள்ளதா? யேமன் சக்தி பிரச்சனையை தீர்த்துள்ளதா? மொராக்கோ அநியாயமாக மேற்க்கத்திய சஹாராவை ஆக்கிரமித்ததை கண்டித்ததா? பங்களாதேஷில் இந்துக்கள் கிட்டத்தட்ட தடுத்ததாக?...ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு சப்ளை நின்னா என்ன நடக்கும்னு அவனுங்களுக்கு நல்லா தெரியும்....மேலும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றும் வளமாக சுபிட்சமாக இன்று இல்லை. இதை நினைவுல வச்சுதான் இந்த பிரச்சனையை பத்தி யோசிக்கணும்.


Prasath
மார் 01, 2025 13:25

ரொம்ப சரி


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:07

UN is non existent. it will be dismantled. no us money for wars. everything going to happen in the world is based on the business deal where two countries of the agreement benefit, that s okay, instead of throwing money as USAID


Kumar Kumzi
மார் 01, 2025 12:18

நல்லா இருந்த உக்ரைன் நாட்டை நாசப்படுத்தியதே இந்த கேடுகெட்ட ஐரோப்பிய நாடுகள் தான் ஆசிய ஆப்பிரிக்கா லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமும் இந்த கேடுகெட்ட ஐரோப்பியர்கள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை