உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கிய ஐரோப்பிய நாடுகள்

உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கிய ஐரோப்பிய நாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை அந்நாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன.உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைனில் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி ரஷ்யா தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை பிரிட்டன் தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார். உக்ரைனின் ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை ஒடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான டிரோன்கள் வாங்கவும், டாங்கி எதிர்ப்பு சுரங்கங்கள், ராணுவ வாகனங்களை பழுது பார்க்கவும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் வழங்கப்படும் ரூ.5,000 கோடியில் ரூ.3,500 கோடியை பிரிட்டன் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நார்வே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஏப் 11, 2025 13:35

ஐரோப்பிய பத்திரிகை அதிபர் சொன்னது நடக்க போகுது ஐரோப்பிய மக்கள் 3 நாளைக்காவது மூட்டை முடிச்சுகளுடன் பத்திரமான ஏடத்துக்கு ஓடிவிடுங்கள் போர் ஏப்போது வேண்டுமானாலும் வரும் என்று இங்கே திபெத் ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உறுதியாக வரும் என்று ஜாபின் காரன் சொல்லி தான் இங்கு உள்ள அரசியில்வியாதிகள் பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை அவர் கட்சி அவர் கொள்கை அவர் பதவி இதை தவிர வேற ஒன்றும் இவனுக மண்டியில் என்றது போல இருங்கட இயற்கை கொடுக்க போகும் பரிசு சூப்பரா இருக்கும் அப்போ நீ உயிரோட இருபீயா உனக்கு அம்புட்டு ஆணவம் திமிர் ஆகிசு அடி வாங்க போகிறாய் பாரு போ புரியும்


djivagane
ஏப் 11, 2025 13:24

European countries are distributing billions of public money to Ukraine despite the poverty, the crisis, the mysery that is growing in these countries at the expense of the population without any consultation of the people


ponssasi
ஏப் 11, 2025 12:55

இந்த ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை ஒழிக்காமல் விடமாட்டார்கள். இன்றும் அம்பதாயிரம் கோடி ராணுவ உதவிகூட கொடுங்கள் சண்டையிட்டு இறப்பது யார்? உக்ரைன் ஒன்றும் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு அல்ல. அங்கு இருக்கும் வீரர்களும் மிக சொற்பமே. இருப்பவர்களையும் இழந்துவிட்டு உக்ரைன் என்ன செய்யப்போகிறது. ரஷ்யா நாடு உன்கரணை சொந்தம் கொண்டாடி வரவில்லை, ரஷ்யாவுக்கு எதிராக போர்செய்ய. என் காலடியில் கொண்டுவந்து என் எதிரியை வைக்காதே என்றுதான் சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இருந்தால் நாம் வல்லரசாகிவிடலாம் என பேராசை கொண்டு இருப்பதையும் இழந்து நிற்கிறது உக்ரைன்.


xyzabc
ஏப் 11, 2025 10:42

Good to know that the European countries are helping Ukraine. Otherwise, they will be in a helpless situation.


புதிய வீடியோ