உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n7r8qt95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vbs manian
ஜன 30, 2024 19:51

இந்த விஷயத்தில் பாக் எவ்வளவோ மேல்.


ராமகிருஷ்ணன்
ஜன 30, 2024 15:47

தண்டனை குறைவாக உள்ளது. செய்தது தேச துரோக குற்றம்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜன 30, 2024 15:39

இவனுக பண்ற கொடுமைய பாத்தா இம்ரான்கானே என்னை ஆளை விட்ருங்கடா நான் பாகிஸ்தான் தேர்தல்ல போட்டியிடல எங்கயாச்சும் வெளிநாட்ல போய் பவுலிங் கோச்சா இருந்து கூட பொழச்சுக்கிறேன்னு அவர் வாயாலேயே சொல்ல வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி விட்ருவானுக போல அதான் நடக்கப் போகுது.


Siddhanatha Boobathi
ஜன 30, 2024 15:13

பாகிஸ்தானில் அமெரிக்காவை எதிர்த்தால்இதுதான் கதி.


Balasubramanian
ஜன 30, 2024 14:30

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அனைத்து பாகிஸ்தான் தலைவர்களுக்கும் எதிர்காலத்தில் இதே கதிதான்....இந்தியா ஒரு ஆன்மிக பூமி ...


Raj
ஜன 30, 2024 14:29

சபாஷ்... இதுவே இந்தியாவில்... தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அவர் இப்பொழுது வீட்டில் சந்தோசமாக இருந்திருப்பார்... நம்மவரது பொன்முடி போல.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை