உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பிரதமர் வீட்டில் தீ: உக்ரைன் இளைஞர் கைது

பிரிட்டன் பிரதமர் வீட்டில் தீ: உக்ரைன் இளைஞர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த 21 வயது இளைஞரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக ஸ்டாமர் உள்ளார். இவர், தலைநகர் லண்டனில் உள்ள டவுனிங் தெருவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் உள்ள அவரது சொந்த வீட்டில் கடந்த 12ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், வீட்டின் முன் பகுதி சேதமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிழக்காசிய நாடான உக்ரைனைச் சேர்ந்த ரோமன் லாவ்ரினோவிச், 21, என்ற இளைஞர் தீ வைத்ததை கண்டறிந்து கைது செய்தனர்.கைதான லாவ்ரினோவிச், இதே மாதத்தில், அப்பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கும், சாலையில் நிறுத்தப்பட்ட சொகுசு காருக்கும் தீ வைத்தது தெரியவந்தது.இதுதொடர்பாக அவர் மீது போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை