வாசகர்கள் கருத்துகள் ( 2 )
படத்தில் ஒரு அக்கா சோபாவை தூக்கிக் கொண்டு போகிறார்
உடனே அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய அரசு கிளம்பியிருக்குமே ...
அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள ஒரு சந்தை நகரத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் நைஜர் மாகாணம் மக்வா நகரில் நேற்று கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்வா நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கனமழை, வெள்ளத்தில் இதுவரை 111பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இது குறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியதவாது: பெருவெள்ளத்தினால் ஏராளமான மக்களின் உயிர்கள் தற்போது அபாயத்தில் உள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
படத்தில் ஒரு அக்கா சோபாவை தூக்கிக் கொண்டு போகிறார்
உடனே அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய அரசு கிளம்பியிருக்குமே ...