உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுடன் அமைதியை விரும்புகிறோம்; பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு

உக்ரைனுடன் அமைதியை விரும்புகிறோம்; பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்றாவது ஆண்டாக நடக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=btnlol0c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சு நடத்தினார். ஆனால், போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை.இந்நிலையில், உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தி சேனலுக்கு புடின் அளித்த பேட்டி: எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு நாள் ஈஸ்டர் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மேலும் போர் நிறுத்தங்களைத் தொடர விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

baala
ஏப் 22, 2025 10:55

இப்படி பேச கூச்சமே இல்லையா உனக்கு


ramesh
ஏப் 22, 2025 10:00

ஜெலான்ஸ்கி ஒரு கோமாளி நடிகன். இவருடைய கோமாளி தனத்தால் உக்ரைன் மக்களின் உயிர்பலி, மக்களின் சொத்துக்கள் இழப்பு, மற்றும் பொதுமக்களின் உடல் நிரந்தர ஊனம் நடந்து இருக்கிறது. ஆனால் இந்த கோமாளி நடிகர் தன்னுடைய பிடிவாதத்தால் தன் நாட்டு மக்களை இன்று வரையில் கொன்று குவிக்கிறார். ரஷ்ய ராணுவத்திடம் இவர் சிக்கினால் இவருடைய முடிவும் அமெரிக்கா ராணுவத்திடம் சிக்கிய சதாம் ஹுசைன் முடிவை போல தான் இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது


bharathi
ஏப் 22, 2025 09:18

நக்கல்யா உனக்கு


M Ramachandran
ஏப் 22, 2025 08:59

ஜெலன்ஸ்கி எடுப்பர் கைபிள்ளை. தூண்டி விட்டவன் அட்ரஸ் காணோம். வரும் பானத்தில் குளிர்காய முடிகிறது. அதை விட்டு சமாதானம் யாருக்கு உதவும்? பணம் சேர்த்து ஐரோப்பாவில் எங்கிட்டாவது செட்டிலே ஆகி விடலாம் என்று இருக்க சமாதான பேச்சு அதற்க்கு உதவாது.


சமீபத்திய செய்தி