உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கர்களின் கனவுகளை திருடும் வெளிநாட்டினர்: டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு

அமெரிக்கர்களின் கனவுகளை திருடும் வெளிநாட்டினர்: டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் எச்1 பி விசாவை பயன்படுத்தி அமெரிக்கர்களின் கனவுகளை வெளிநாட்டினர் திருடி வருகின்றனர் என அமெரிக்க தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து டொனால்டு டிரம்ப், எச்1 பி விசா மற்றும் குடியேற்ற விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார். இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதன் பிறகு, ஏற்கனவே விசா வைத்துள்ளவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து, குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கையாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை தானாக புதுப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர் துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த நாடுகளுக்கு எச்1பி விசா அ திகம் வழங்கப்படுகிறது என்பதுடன், இந்தியர்களுக்கு 72 சதவீத விசா வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.அத்துடன் அந்த வீடியோவில், அமெரிக்க மக்களிடம் இருந்து அமெரிக்க கனவுகள் திருடப்படுகின்றன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எச்1 பி விசாவை தவறாக பயன்படுத்த அனுமதித்ததால், பல இளம் அமெரிக்கர்களின் கனவை வெளிநாட்டு தொழிலாளர்கள் திருடியுள்ளனர். டிரம்ப்பின் திட்டத்தால், எச்1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதற்கு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் அமெரிக்கர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
அக் 31, 2025 21:52

இவருடைய புலம்பல் மற்றும் மிரட்டலுக்கு அளவே இல்லை.. அமெரிக்கா இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் பல வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களே.. அதிலும் யூதர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் பங்கு அதிகமே.. அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அமெரிக்கா முன்னோடியாகத் திகழ்வதற்கு இவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர்..


Ramesh Sargam
அக் 31, 2025 21:16

இந்தியர்கள் தங்களுடைய கனவுகள், குடும்பம், உற்றார் ,உறவுகள், நண்பர்கள், பெற்றவர்கள் மற்றும் வாழ்க்கையை பணத்துக்காக அங்கே தொலைக்கிறார்கள்.


ManiK
அக் 31, 2025 20:59

இது புரியவே இ‌வ்வளவு ஆண்டு ஆகியிருக்கா?! பல போலி இந்திய ஸாப்ட்வேர் இஞ்சினியர்கள் குடியேறி அமெரிக்கன் சிடிசன் ஆகி அவர்களின் அடுத்த தலைமுறையே இந்தியர்களுக்கு எதிராக இப்போ திரியறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை