| ADDED : அக் 22, 2025 01:40 AM
பாரிஸ்: சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி சிறையில் அடைக்கப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரான்சில், 2007 முதல் 2012 வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சார் கோசி. இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லி பியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் வழங்கப்பட்ட உத்தரவில், சர்கோசிக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர், பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறார். தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்துள்ளார். அது, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் ஒருவர் சிறை செல்வது இதுவே முதல்முறை.